Tuesday ,25, February. 2014
இலங்கை::வியத்தகு தேசத்திற்காக தங்கக் கரங்களுக்கு பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளில் இலங்கை ஆசியாவின் வியத்தகு விந்தையை நோக்கிச் செல்லும் பயணத்தில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், இலங்கை நிதி திட்டமிடல் அமைச்சின் கீழ் இயங்கிவரும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் 725 கமக்காரப் பெருமக்களுக்கு அளப்பரிய நன்மைகளுடன் நிலைபேறான ஓய்வூதியத்தை வழங்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப விழா, நேற்று (24) திங்கட்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயம் மண்டபத்தில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது விஷேட கருத்திட்ட அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், அரசாங்க அதிபர் சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா உள்ளிட்ட அதிதிகளினால் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மதங்களைச் சேர்ந்த 725 கமக்காரப் பெருமக்களுக்கு அளப்பரிய நன்மைகளுடன் நிலைபேறான ஓய்வூதியம், உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விஷேட கருத்திட்ட அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் பணிப்பாளர் பண்டு த.வீரசிங்க கமத்தொழில் காப்புறுதிச் சபையின் உதவிப் பணிப்பாளர் விநாயகமூர்த்தி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும், மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் ஜெஸீம், தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் (ஜனா), பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சரின் செயலாளர் முஸ்தபா, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அந்தரங்கச் செயலாளர் நாஸர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 725 கமக்காரப் பெருமக்களுக்கு அளப்பரிய நன்மைகளுடன் நிலைபேறான ஓய்வூதியம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் காப்புறுதிச் சபையின் உதவிப் பணிப்பாளர் விநாயகமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, கமக்காரப் பெருமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சில பிரச்சினைகள் காணப்பட்டு, அவை சில காலங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்து. அவற்றினை சீர்செய்து ரூபா 1,000 முதல் ரூபா 5,000 வரையில் கமக்காரப் பெருமக்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment