Tuesday, January 28, 2014

இலங்கை படகு பழுது: மீனவர்கள் பயணம் ரத்து!

Tuesday, January 28, 2014
ராமேஸ்வரம்::இலங்கை மீனவர்களின் படகு சேதமடைந்ததால், படகுடன் மீனவரை இலங்கைக்கு அனுப்பும் பயணம் ரத்து செய்யப்பட்டது.
 
இலங்கை நீர்கொழும்பு மீனவர்கள் வர்ணகுல சூரிய ஜெலஸ்டின் ஜெனோமணி, வர்ணகுல சூரிய ஜெயலால் புஷ்பகுமார் ஆகியோர் 22.7.13ல், பைபர் படகில் மீன்பிடித்தபோது, இயந்திரக் கோளாறால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் தஞ்சமடைந்தனர். அவர்களை, போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தற்போது இருநாட்டு சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படுவதால், இவர்களும் ஜன., 17 ல் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இதில் ஜெயலால் புஷ்பகுமார் விமானம் மூலம் கொழும்பு சென்றார். மற்றொரு மீனவர் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது படகில் அனுப்பி வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அவரது படகில் ஓட்டையை சரி செய்யும் பணி தாமதமானது. இதனால்,அவரது இலங்கை பயணம் ரத்தானது. பழுது சரி செய்து, இன்று அவர் இலங்கை செல்வார் என, ராமேஸ்வரம் போலீசார் தெரிவித்தனர்.
 
 
 

 

No comments:

Post a Comment