Tuesday, January 28, 2014
இலங்கை::புலிகள் அமைப்பின் போராளியாக இருந்து 1999ம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பங்குகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட யாழ். தீவகம் சரவணையைச் சேர்ந்த மகாலிங்கம் ஜனகன் நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மேமாதம் 16ம் தேதி முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகலில் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் ஜனகன் 28 நவம்பர் 2013 அன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்ற ஒப்புத
ல் வாக்குமூலம் மட்டுமே சாட்சியாக உள்ளமையால் மேலதிக சாட்சிகளை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து அவரது வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட ஜனகனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் குறித்த சந்தேக நபரினை விடுதலை செய்யுமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம் சங்கர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment