Tuesday, January 28, 2014

விஜயகாந்த் ஸ்டாலின் சந்திப்பு? தே.மு.தி.க.,வில் திடீர் பரபரப்பு!

Tuesday, January 28, 2014
சென்னை::ராஜ்யசபா தேர்தல் குறித்து, ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இருவரும் நேற்றிரவு சந்தித்து பேசியதாக தே.மு.தி.க., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்த மாதம், 7ம் தேதி நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு ஆதரவளிக்க தி.மு.க., முன்வந்துள்ளது.
 
தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., கூட்டணி ஏற்படும் பட்சத்தில், தி.மு.க., நிறுத்தியுள்ள வேட்பாளரான திருச்சி சிவா, வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என தெரிகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று இறுதி நாளாகும். இந்நிலையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தும் சென்னைக்கு வெளியே சந்தித்து, ராஜ்யசபா, லோக்சபா தேர்தல் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 
ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிடுவது குறித்தும், மத்திய அமைச்சர் வாசனுக்கு விட்டுக் கொடுப்பது குறித்தும் இருவரும் விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாபு முருகவேலை, தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி, நேற்று வேட்பு மனுவை அக்கட்சி தலைமை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment