Tuesday, January 28, 2014
இலங்கை::கடற்படையினரின் பொதுமக்கள் மீதான நலன் புரிச் சேவையை விரிவு படுத்தும் பொருட்டு கடந்த ஜனவரி 25 ஆம் திகதி முள்ளிக்குளம், மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்று நடாத்தப்பட்டது.
வெற்றிகரமாக அமைந்த இம்மருத்துவ முகாமில் புத்தளம் ஆதார வைத்தயசாலை வைத்தயர்கள் அடங்கிய தொண்டர் குழு, கொழும்பு தெற்கு போதனா வைத்திய சாலை வைத்தியர்கள், பல் மற்றும் ஆய்வு கூட அதிகாரிகள் மற்றும் புற்று நோய் பிரிவு போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இம்முகாமில் சிகிச்சைகளையளித்தனர்.
இச்சிகிச்சை முகாமில் 1,206 நோயாளிகள் சிகிச்சைக்காக சென்றதுடன் இலவசமாக போசாக்கு உணவுகளும், உலர் உணவுப் பொதிகளும் பாடசாலைப் பொருட்களும் தேவைப்பட்ட குடும்பங்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
இச்சிகிச்சை முகாமின் மூலம் புதிதாக மீளக்குடியேறிய முள்ளிக்குளம், பூக்குளம், மரிச்சிக்கட்டி, பலுகஸ்துறை, காவக்குலி,சவரிபுரம், கரடக்குலி, மற்றும் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த சிங்களம், தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் நன்மை அடைந்தனர்.
No comments:
Post a Comment