Tuesday, January 28, 2014

ஆனந்தி சசிதரனின் குரல் பாதிக்கப்பட்டவர்களுக்காகவா அல்லது அநீதியிழைத்தவர்களுக்காகவா?

புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான எழிளன் என அழைக்கப்படும் சின்னதுரை சசிதரனின் மணைவியான ஆனந்தி சசிதரன் வட மகாண சபைத்தேர்தலின் போது மக்களின் அநுதாபத்தைப் பெறும் நோக்கில் நடந்து கொண்டார். யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிக் கூட்டணியில் ஒரேயொரு பெண் வேட்பாளராக சேர்க்கப்பட்டிருந்தார். அத்துடன் அவருக்கு பின்புலத்தில் தாராளமான நிதி வசதியும் நன்கு திட்டமிடப்பட்ட பிரச்சாரமும் ஒருங்கே அமைந்ததால் தேர்தல் பயணத்தில் விரைவான வளர்ச்சி கண்டு வெற்றியும் அடைந்தார்.
 
தனது பிரச்சார பணியின்போது, அதே கட்சியைச் சேர்ந்த யாழ் மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் இ.சரவனபவன், யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் பத்திரிகை, மற்றும் கொழும்பில் வெளியாகும் சுடர் ஒளி போன்றவற்றிலிருந்து பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினார். அனந்தி சசிதரன் சுளிபுரத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டதுடன் அது வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் அமையப் பெற்றிருக்கும் அதேவேளை இப்பகுதியானது தமிழ்தேசிய கூட்டணியின் அமைப்பாளர் இ.சரவனபவன் 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்கு அத்தொகுதி மக்களிலேயே தங்கியிருந்தார். எனவே ஆனந்தி நீண்டகால அரசியல் எதிர்ப்பை அவர்மீது தெரிவித்துக் கொண்டிருந்தார். இதன்விளைவாக உதயன் பத்திரிகை அனந்தியின் பரப்புரையை இருட்டடைப்பு செயததுடன் அவரது தேர்தல் விளம்பரங்களை கட்டணம் செலுத்தியும் பிரசுரிக்காமல் நிராகரித்தது.
இச்செயற்பாடு யாழ்ப்பாணத்தில் அதிகமான வாசகர்களை வைத்திருந்த உதயனுக்கு பாரிய அடியாக விழுந்தது. ஆயினும் ஊடகமொன்றின் தலையீட்டினால் சரவனபவனுக்கும் அனந்திக்கும் இடையில் சந்திப்பொன்று நிகழ்ந்தது. இச்சந்திப்பில் இருவருக்குமிடையில் பேசப்பட்ட விடயம் அறியப்படவில்லை. இருப்பினும் அதன்பின்பு ஆனந்தியின் விளம்பரங்களும் தேர்தல் தொடர்பான செய்திகளும் தொடராக உதயன் பிரசுரித்தது. ஆனந்தியுடனான நேர்காணலும் அதில் பிரசுரிக்கப்பட்டன.
 
முன்னேற்றங்கள்
 
தேர்தல் கால பிரச்சாரங்களின் போது ஆனந்தியின் வெற்றிக்கு நான்கு விடயங்கள் பெரிதும் உதவியாக அமைந்தது. முதலாவதாக, முன்னால் போராட்ட உறுப்பினர்களைக் கொண்டு பகிரங்க எதிர்ப்பைத் தெரிவித்தமை. அவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு அனந்தியின் வெற்றியை நோக்காகக் கொண்டு கோசமிட்டவாறு இவ்வாறான நிகழ்வில் பங்கேற்றனர். இரண்டாவதாக, அவர் யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு இரவு நேரம் தனது வீட்டுக்கு திரும்பும் வேளையில் அவரைக்கடந்து ஒரு வி.ஐ.பி வாகணம் சென்றுள்ளது. அச்சந்தரப்பத்தில் இனந் தெரியாத நபரினால் அவரது வாகணத்தின் மீது பாரமான பொருள் ஒன்று வீசப்பட்டு அது வாகணத்தை சேதப்படுத்தியமை.
மூன்றாவது நிகழ்வு, சுழிபுரத்திலுள்ள அவரது வீடு சீருடையணிந்த வர்களைக் கொண்ட குழுவொன்றினால் தாக்கப்பட்டமையாகும். இதன்போது வீடு சேதமாக்கப்பட்டதுடன் தளபாடங்களும் நிறுத்தப்பட்டிருந்த வாகணங்களும் சேதமாக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் அவரது பரப்புரை உறுப்பினர் குறைந்தது எட்டு பேர்
 
தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிஸ்டவசமாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதற்கிடையில் ஆனந்தியும் அவரது மூன்று பிள்ளைகளும் பின்புறமாக பாதுகாப்பான இடத்தை தேடி தப்பிச் சென்றுவிட்டனர். பயங்கரமான தாக்குதலின் காரணமாகவே அவரது ஆதரவாளர்கள் அவரையும் பிள்ளைகளையும் தப்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.
இச்சம்பவமானது யாழ்ப்பாணத்தில் தேர்தல்கள் சூடுபிடித்துக் கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்தமையினால் ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கவனத்தை பெரிதும் கவரக்கூடியவாறு இச்செயல் அமைந்தது. இதனால் அனந்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சியினை குற்றம் சுமத்தினார். எனினும் தமிழ் தேசியக் கூட்டணியினால் ஆர்வத்துடன் உத்தியோக பூர்வமாக எதுவித பத்திரிகை மா நாடுகளும் நடத்தப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
தேர்தல் பிரச்சாரம்
 
இது தொடர்பாக த.தே.கூ யினால் இரண்டு வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. முதலாவதாக த.தே.கூ யின் உயர் பீடத்தினர் தாக்குதலின் உண்மைத்தன்மை பற்றி திருப்தியடையவில்லை. எனவே பொது பத்திரிகையாளர் மா நாட்டில் அனந்தி மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டனர். இரண்டாவதாக இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து அனந்திக்குக் அதிகரித்து வரும் பிரபல்யத்தைப் பார்த்து கவலையடைந்தனர். இதேவேளை ஒரு உதவி முகாமையாளர் ஓய்வு பெற்ற ஒரு உயர் நீதி மன்ற நீதிபதியைவிட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுவிடுவாரோ என்ற கவலையும் அவர்களிடையே இருந்தது. இருந்த போதும் ஏற்பாடு செய்யப்படாத ஊடகவியலாளர் மா நாடுகள் அனந்தியின் வாக்கு வங்கியை பாதிக்கவில்லை. அனந்தி அவ்வப்போது தனிப்பட்ட ரீதியில் பேட்டியளித்ததன் மூலமும் தனது வீட்டில் ஊடகவியலாளர்களிடமும் மற்றும் தொலை பேசியினூடாக தனது கருத்துக்களைத் தெரிவித்தன் மூலமும் அபாரமாக வாக்குகளை சேகரிக்க வழிவகுத்தது.
 
பல்வேறுபட்ட சக்திகள் த.தே.கூ ல் இடம் பெற்றிருந்ததனாலும் புலம் பெயர் தமிழர்களும் ஒரேநோக்குடன் செயற்பட்டதால் அதாவது இவ்வகையான சக்திகள் விக்னேஸ்வரனின் வெற்றியில் ஆர்வம் காட்டாமையே இது அனந்திக்கு சிறந்ததோர் ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்க உந்து சக்தியாக அமைந்தது. தேர்தல் பரப்புரையும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆகவே விக்னேஸ்வரனின் பரப்புரை முகாமுக்குள் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தெடங்கியது. அவர்கள் தமது பக்கத்துக்காக வாக்கு வங்கியை நிரப்பும் நோக்குடன் ஆளுணர் மற்றும் வடக்கில் உள்ள இராணுவ பிரசன்னம் தொடரபாக பேசியதன் மூலம் மக்களை தூண்டச்செய்தது.
 
தேர்தல் தினம் நெருங்கிவரும் பொழுது விக்னேஸ்வரன் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாககுகளைப் பெறப்போகிறார் எனத் தெரிந்தது. கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கு மதிப்பளிக்கும் பழமைவாத கருத்துக்களைக் கொண்ட யாழ்ப்பாண மக்கள் படித்த முன்னாள் நீதிபதிக்கே தங்கள் வாக்குகளை வழங்கப் போகிறார்கள் என்பது தெளிவானது. விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உறுதியாக விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் மற்றவர்களுக்கு அல்ல என்கிற பிரச்சாரம் கால் நடையாகச் சென்று வீட்டுக்குவீடு மேற்கொள்ப்பட்டதை அடுத்துää அவரது விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரித்தது.
 
தேர்தல் தினமான செப்டம்பர் 21 ந்திகதி விடியும்போதுää ஆனந்தி தொடர்பான தேர்தல் முன்னேற்றம் நடந்தது. இது ஒரு வன்முறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அது ஒரு மோசடி நடவடிக்கையாக இருந்தது. நிஜமான உதயன் பத்திரிகையை போன்ற வடிவத்தில் ஒரு போலி உதயன் பத்pரிகையை அச்சடித்து அதில் ஆனந்தி சசிதரன் ரி.என்.ஏ யினை கைவிட்டு அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிட்டார் என்கிற பரபரப்பன செய்தியையும் பிரசுரித்திருந்தார்கள். இந்த போலி உதயன் செய்தி அதிக ஆர்வத்தை எழுப்பியிருந்தது ஆனால் அவநம்பிக்கை மற்றும் ஏளனம் காரணமாக அதை எல்லோரும் புறக்கணித்தார்கள். இந்த் கள்ளப் பதிப்புக்கு காரணமானவர்கள் படையினர் தான் என பரவலாக எதிர்பார்க்கப் பட்டதால்ää யாழ்ப்பாண வாக்காளர்களை எளிதில் ஏமாற்ற முடியவில்லை.
 
போலித்தனம்
 
எனினும் இந்த போலித்தனமான செயற்பாடு ஆனந்தி சசிதரனின் பக்கம் ஒரு அனுதாப அலையை வீசத்தான் செய்தது. அநேக த.தே.கூ வேட்பாளர்கள் மத்தியிலும் இந்தப் பெண் மட்டும் ஏன் தனியாக இலக்கு வைக்கப்படுகிறார்? காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்கிற பழமொழியின் கதைதானா இதுவும்? என்கிற கேள்விகள் முளைக்கத் தொடங்கின. ஆனந்தி மீதான தாக்குதல்களின் பின்னணியில் எந்த உள்நோக்கம் இருந்தாலும் சரி அதன் மொத்த விளைவாக ஒரு பெரிய அனுதாப அலை உருவானது. உருவாக்கப்பட்ட அனுதாபம் மிகப் பெரிதாக இருந்ததால் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்வதற்கு நடத்தப்படும் விருப்பு வாக்கு பந்தயத்தில் மிகவும் நெருக்கமான போட்டி ஏற்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதே என்று விக்னேஸ்வரனின் முகாமில் மீண்டும் ஒரு பயம் உருவானது. எனினும் இறுதி முடிவுகள் விக்னேஸ்வரன் சார்பான முகாமினரது பயத்தை பொய்யாக்கியதுடன் விக்னேஸ்வரனது எதிர் முகாமில் உள்ளவர்களது நம்பிக்கையை தவறாகவும் மாற்றியது. விருப்பு வாக்கு எண்ணிக்கையில் 132355 வாக்குளைப் பெற்று சி.வி. விக்னேஸ்வரன் முதலிடத்தை கைப்பற்றிய அதேவேளை ஆனந்தி சசிதரன் 87770 வாக்களைப் பெற்று இரண்டாவதாக வந்திருந்தார்.
 
ஆனந்தியின் வெற்றி பலபேர்களுக்கு குறிப்பாக சில மேற்கத்தைய இராஜதந்திரிகளுக்கு வியப்பான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சக்தி வாய்ந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தூதர் முக்கியமாக அதில் ஈர்க்கப்பட்டதுடன் ஆனந்தியுடன் ஒரு சந்திப்பையும் மேற்கொண்டார். இந்தப் பெண் தூதுவர் கட்சிக்கு உரித்தாகவுள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தோல்வியடைந்த பெண்களில் ஒருவருக்கு வழங்கினால் அவர் ஆனந்தி சசிதரனுக்கு தார்மிக அதரவை வழங்குவார் எனச்சொல்லி அதை த.தே.கூ ப்பின் தலைவரை ஏற்றுக் கொள்ள சம்மதிக்க வைப்பதில் முக்கிய பங்கினை வகித்துள்ளாராம். இது ஏற்றுக் கொள்ளப் பட்டதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி மேரி கமலா குணசீலன் நியமனம் பெற்றார்.
 
த.தே.கூ பின் வெற்றிக்குப் பிறகு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் விடயத்தில் கட்சி பல்வேறு அழுத்தங்களை தாங்கவேண்டி நேர்ந்தது. பல்வேறு கோரிக்கைகள் மற்றும் எதிர் கோரிக்கைகள் என்பன முறையே அழுத்தம் தெரிவிக்கும் குழுவினராலும் மற்றும் செல்வாக்குள்ள வெளியாட்களாலும் மேற்கொள்ளப்பட்டன. ஆனந்தி சசிதரனின் முகாமைச் சேர்ந்தவர்கள் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். இந்தக் கோரிக்கை சில பெண்கள் அமைப்புகளாலும் ஆதரிக்கப்பட்டது. 1எனினும் அப்படி எதுவும் நடக்கவில்லை.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் என்கிற பொறுப்புடமையை பல விடயங்களாகப் பிரித்து பல்வேறு அமைச்சுகளின் எல்லைகளின் கீழ் மாகாணசபை அங்கத்தவர்களுக்கும் கடமைகளை வழங்கியுள்ளார். இவைகள் ஒரு ஆலோசனையாளர் தகுதியுடையவை மற்றும் இந்த அங்கத்தவர்கள் முறையே அதற்கான பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் கீழ் கடமையாற்ற வேண்டும். விக்னேஸ்வரன் தனது பொறுப்பின் கீழுள்ள விடயங்களான: “ஆதரவற்ற நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான சொத்து மறுவாழ்வு மற்றும் உடல் உள்ளம் மற்றும் சமூக ரீதியில் ஊனமுற்றவர்களாக உள்ளவர்களின் மறுவாழ்வு மற்றும் நலன்புரி விடயங்கள் ஊனமுற்ற மற்றும் வேலையற்றவர்களுக்கான நிவாரணம் (இதில் சமூக அம்சங்கள் மற்றும் போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண்கள் தலைமையேற்கும் வீட்டுடமைகள் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் போன்றவர்கள் மீது அதிக வனம் செலுத்துதல்) மற்றும் பிரதானப்படுத்தப்பட்ட பாலினம்” போன்றவற்றில் ஆனந்திக்கு ஒரு பங்கினை ஒதுக்கியுள்ளார்.
 
டி.பி.எஸ். ஜெயராஜ் 

No comments:

Post a Comment