Tuesday, January 28, 2014

இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கபடவுள்ளது!

Tuesday, January 28, 2014
இலங்கை::இலங்கை தொடர்பில் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கபடவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்று காலை நடைபெற்றது.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியுள்ளார்.

இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், யுத்த வலயத்தில் உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2004ம் ஆண்டு ஆழிப்பேரலை முதல் அவுஸ்திரேலியா வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை அவுஸ்திரேலிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment