இலங்கை::சர்வதேச சமூகம் ஒரு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரச படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மட்டுமே சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உதாசீனப் போக்கைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்களை சர்வதேச சமூகம் மனித உரிமை மீறல்களாக கருதாது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை புறக்கணித்து வருவதுடன் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் சர்வதேச ரீதியான பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
புலிகள் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் பௌத்த பிக்குகளை படுகொலை செய்தததையும் எவரும் மனித உரிமை மீறல்களாக பார்ப்பதில்லை.
அரசாங்கம் எந்தவிதமான அழுத்தங்களையும் எதிர்நோக்கத் தயார் எனவும், கிராமத்தைச் சேர்ந்த மக்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கிராமத்தைச் சேர்ந்த சாதாரண மக்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதியும் அடிக்கடி கூறி வருவதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment