Wednesday, January 29, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் குறித்து இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

Wednesday, January 29, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் குறித்து இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அமெரிக்கா ஆதரவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
அமைச்சர் பீரிஸ் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீனவர் பிரச்சினைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆகியன தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஜீ.எல்.பீரிஸ், டெல்லியில் உள்ள ராஜதந்திரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு தயாராகும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஏனைய அமைச்சர்கள் மற்றும் ராஜதந்திரிகள் வெளிநாடுகளுக்கு பயணம்செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment