Wednesday, January 29, 2014
இலங்கை::புலிகளுக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட
உள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2001ம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையிலான உறவு தொடர்பில் விசரணை
நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர்
தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக புலிகளை, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலி ஆதரவு செயற்பாடுகள்
குறித்து சர்வதேச சமூகத்திற்கும் அறிவிக்கப்படும் என அவர்
தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபையின்
உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2001ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களின் போது புலிகளின் ஆதரவுடன் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டியதாக ஐரோப்பிய கண்காணிப்பு குழு
தெரிவித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளின் சார்பில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர் மக்களை தேர்தலை புறக்கணிக்குமாறு கோரியிருந்தனர் என அவர்
தெரிவித்துள்ளார்.
புலிகளின் நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
முக்கியஸ்தர்கள் பங்கேற்றமைக்கான புகைப்பட வீடியோ ஆதாரங்கள்
காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2001, 2004ம் ஆண்டு தேர்தல்களின் போது புலிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment