Wednesday, January 29, 2014

இலங்கையில் இராணுவத்தினர் வழமையான மனிதாபிமான வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்தினர்!

Wednesday, January 29, 2014
இலங்கை::தடைசெய்யப்பட்ட ஆயுதங்ளை இராணுவத்தினர் பயண்படுத்தியதாக கூறப்படும் புதிய குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கத்தக்கவை
 
இலங்கையில் மனிதாபிமான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றவேளை இரசாயன ஆயுதங்கள் உட்பட தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக ஊடகங்களினால் தெரிவிக்கப்படும் இவ்வாறான குற்றச் சாட்டுக்கள் ஆதாரமற்றவையும் நிராகரிக்கத்தக்கவையுமாகும்.

ஆயினும் புலிகளே இலங்கையில் பொதுமக்களுக்கு எதிராகவும் இராணுவத்தினருக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பல வழக்கத்திற்கு மாறான விடயங்களையே கையாண்டனர். இராணுவத்தினர் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது வழமையான ஆயுதங்களையே பயன்படுத்தியிருந்தனர் என மீளவும் வலியுறுத்தப்படுகின்றது.
கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் எதிர்வரும் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களை கவரும் நோக்குடன் ஆதாரமற்ற புதுப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..

Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com
Tamilwin.com

No comments:

Post a Comment