Wednesday, January 29, 2014

இராணுவத்தின் தொண்டர் படையணியினால் கல்விக்கான நிதியுதவி!

Wednesday, January 29, 2014
இலங்கை::இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணி அங்கத்தவர்களுக்கான நலன்புரி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இடம் பெற்றுவரும் கல்விக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று  காலை (ஜன.28) பண்டாரநாயக ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க அவர்கள் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.
 
இத்திட்டமானது யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் தற்போது சேவையில் உள்ள யுத்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இன்றுவரை பயண் பெற்ற பிள்ளைகளின் விபரம் பின்வருமாறு.
 
இவ்வருட நிகழ்வுகளை மேலும் சிறப்பூட்டும் வகையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து மடிக் கணினிகள் வழங்கப்பட்டதுடன், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க அவர்கள் “ரனவிரு தூதரு” நிதியத்திற்காக 2.5 மில்லியன் ரூபாய் பெருமதியான காசோலையை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
இந் கழ்வில் இராணுவத் தலபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. தமயந்தி ரத்நாயக, இராணுவ உயரதிகாரிகள் மற்றும் இராணுவத்தின் தொண்டர் படையணி அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment