Sunday, January 26, 2014இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் சிசன், இம்மாதம் முதல் வாரத்தில் தமக்குத் தெரியப்படுத்தி விட்டதாகவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். இதனையடுத்தே, இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment