Sunday, January 26, 2014

சர்வதேச புலம்பெயர்ந்த புலிகளின் அமைப்புகளான பிரித்தானிய தமிழக பேரவை மற்றும் உலக தமிழர் பேரவைக்கு இடையில் பிளவு!!

Sunday, January 26, 2014
இலங்கை::சர்வதேச தமிழ் புலம்பெயர்ந்த புலிகளின் அமைப்புகளான பிரித்தானிய தமிழக பேரவை மற்றும் உலக தமிழர் பேரவைக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் உலக தமிழர் பேரவையின் அண்மைக்கால செயற்பாடுகள், அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி, இந்த ஊடகம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் சர்வதேச ரீதியாக காணப்பட்ட அனைத்து தமிழ் புலம்பெயந்த அமைப்புகளும் ஒரே நோக்கிலேயே செயற்பட்டு வந்தன.

ஆனால் தற்போது தமது கொள்கைகளை மீறி, உலக தமிழர் பேரவையின் தலைமை செயற்பட்டு வருவதாக, பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க உலக தமிழர் பேரவை தவறிஇருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக தமிழர் பேரவையிடம் இருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை தமிழ் மக்களுக்கான தங்களின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க தயராக இருப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment