Thursday, January 30, 2014
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக் குழுவுக்கு ஒன்றுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேரைக் கொண்ட குற்றவாளி குழு ஒன்றே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு கடத்திச் சென்றதாக குறித்த குழு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் இலங்கையர்கள் எனவும் ஒருவர் பிரித்தானியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தலா 4500 ஸ்ரெலிங் பவுண்ட்கள் அறவீடு செய்து இலங்கையர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், இந்த கடத்தல் முயற்சிகளில் பலவற்றை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் முறியடித்துள்ளனர்,
பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வட அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர்.
37வயதுடைய சுதர்சன் ஜயகொடி, 42 வயதான சுப்ரமணியம் விக்னராஜா, 39 வயதான கமலநேசன் கந்தையா மற்றும் சௌந்தரநாயகம் உவைஸ் ஆகியோர் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 46 வயதான அமர்ஜித் முதாஹர் என்ற பிரித்தானிய பிரஜை ஒருவரும் தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து மற்றும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment