Thursday, January 30, 2014
இலங்கை::உகாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு குடாநாட்டிற்கும் பயணம்.
உகாண்டாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஒடங்கோ ஜேஜே உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட இராணுவக் குழுவினர் இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். யாழ். பலாலி இராணுவப் படைத் தலைமையத்தில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் ஆலயத்திற்கு சென்ற அக்குழுவினர், யாழ். கோட்டைப் பகுதியினைப் பார்வையிட்டதுடன், யாழ். பொதுநூலகத்திற்கும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment