Thursday, January 30, 2014
இலங்கை::யுத்தத்தின்போது இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தின் அலுவலகம்கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது .
இந்த அலுவலகத்தை கிளிநொச்சி ஏ -9 வீதியில் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இல . 37 இல் கிளிநொச்சி திரேசா தேவாலயப் பங்குத்தந்தை ஜோர்ஜினால் நாடாவெட்டித் திறந்து வைக்கப்பட்டுள்ளது .
யுத்தத்தினாலும் இடப்பெயர்வுகளினாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் தமது வாழ்வாதாரத்தை க்கொண்டு நகர்த்தமுடியாமலும் சிரமப்பட்ட போது வடக்கு மற்றும் கிழ - க்கு மாகாணப் பகுதிகளில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு உதவி வருகின்றது .
இந்த வகையில் கிளிநொச்சிக் - கான அலுவலகமும் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது . இறந்த மற்றும் காணாமல்போன பெற்றோர் , உறவினர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தில் இறந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர் , உறவினர்கள் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்தின் கிளிநொச்சி அலுவலக அமைப்பாளர் கோபால் குணாளன் தெரிவித்துள்ளார் .
இந்த நிகழ்வில் கிளிநொச்சி முருகன் ஆலய பிரதம குருக்கள் , தென்னிந்தியத் திருச்சபையின் கிளிநொச்சி அருட்தந்தை ஜோன் தேவகாம் , இறந்த மற்றும் காணாமல்போன பெற்றோர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஆனந்த ஜெயமால் அதன் வடக்கு , கிழக்கு அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன் , கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி , கிராம அலுவலர்கள் , இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் , உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment