Tuesday, January 28, 2014
இலங்கை::இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நூற்றுக் கணக்கான பொதுமக்கள்
கொல்லப்பட்டமைக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என ஜனாதிபதியின் செயலாளர்
லலித் வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தின் போது
பொதுமக்கள் உயிரிழந்தமைக்கான தகவல்கள் கிடையாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தவில்லை எனவும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடுமையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதனை மறுப்பதற்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் கடந்த 18 மாதங்களாகவே அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் பிழையான முறையில் அணுகப்பட்டால் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கைப் பிரச்சினைகளுக்கு அமெரிக்க மாதிரியிலான தீர்வுத் திட்டம் ஏற்புடையதல்ல எனவும், உள்நாட்டு ரீதியான பொறிமுறைமையே தீர்வினை எட்ட சரியான வழி எனவுமு; அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

No comments:
Post a Comment