Thursday, January 02, 2014
இலங்கை::அரச ஊழியர்களாகிய நாம் நாட்டின் சமூக மயமான பொருலாதார அபிவிருத்திக்காக மிகுந்த அர்ப்பணிப்புடனும் தேசிய ஒருமைப்பாட்டுடனும் நற்பணியாற்ற கடப்பாடுடையவர்களாக உள்ளோம் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று காலை அமைச்சின் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
புது வருடத்தின் முதல் வேலை நாளை முன்னிட்டு தமது கடமைகளை புதிதாக ஆரம்பிக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செயலாளர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரச ஊழியர்களான நாம் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்கருதி தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என அவர் சகல ஊழியர்களையும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் சக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.







No comments:
Post a Comment