Thursday, January 02, 2014
இலங்கை::மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நல்ல திட்டங்களை உருவாக்கி பணிபுரிய வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் தார்மீகப் பொறுப்பாக்கும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேதத்தீவு மீள்குடியேற்ற மாதிரிக் கிராமத்தில் 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வீதி அபிவிருத்தி அமைச்சரின் இணைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம்.சியா தலைமையில் நடைபெற்ற போது விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களின் வாக்குகள் மூலம் அரசியல் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் எமது மாகாணத்தில் வாழும் மக்கள் தொடர்பான நல்ல எண்ணங்களுடன் செயல்படுவதுடன் நமது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.
நமது மத்தியில் வாழும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு முடிந்தளவு நல்ல திட்டங்களை உருவாக்கி பணிபுரிய வேண்டும். வாக்களித்த மக்களுக்கு அரசியல் அதிகாரத்தின் ஊடாக எவ்வாறு உச்சமான முறையில் பணிபுரிய வேண்டும் என்பதனை எமது மறைந்த பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் எமக்கு காட்டிச் சென்றுள்ளதுடன் இதன் வழியில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும் செயற்பட்டு வருகின்றார்.
நமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சமாதான நிலைமைக்கும் குறிப்பாக வட கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய நிலைமை ஏற்படுவதற்கும் வரலாற்று இன உறவுகள் வளர்வதற்கும் தேசிய காங்கிரஸ் காத்திரமான பங்களிப்பினை வழங்கி உள்ளது.
யுத்த சூழ்நிலையில் அச்சத்துடன் வாழ்ந்த நமது மக்களுக்கு நிம்மதியை பெற்றுக் கொடுத்து வரலாற்று அபிவிருத்திப் பணிகளை தேடித்தேடி செய்த போதிலும் தேர்தல்கள் வரும் போது கிழக்கு மாகாண மக்கள் இவைகளை உடனடியாக மறந்து விடுகின்றனர். நமது மக்களின் விடிவுக்காகவும், எதிர்கால வாழ்க்கைக்காகவும் சதா தியாக மனப்பாங்குடன் பணிபுரியும்
மக்கள் பிரதிநிதியை எப்படியும் இனவாதம், பிரதேசவாத உணர்வுகளை தூண்டி தேர்தல்களில் தோல்வியடையச் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர்.
மக்களுக்காக பல ஆண்டு காலமாக நல்ல பணி புரிந்து மக்களுடன் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக இனவாதம், பிரதேசவாதம், பணத்துடன் வரும் வேட்பாளர்களை திடீர் வேட்பாளர்களாக நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறும் புதிய அரசியல் கலாசாரம் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மக்களுக்காக பல ஆண்டு காலமாக நல்ல பணி புரிந்து மக்களுடன் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக இனவாதம், பிரதேசவாதம், பணத்துடன் வரும் வேட்பாளர்களை திடீர் வேட்பாளர்களாக நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறும் புதிய அரசியல் கலாசாரம் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு பலத்த திட்டங்கள் தீட்டப்பட்டன. தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் கொள்கையை ஏற்ற அம்பாறை மாவட்ட மக்கள் எனக்கு வாக்களித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம், தமிழ் வேட்பாளர்களுல் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன்.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு பணத்தை வழங்கி மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட எனது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனது பிரதேசத்தில் நடைபெறும் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை அரசியல் காழ்புனர்ச்சி காரணமாக தவறான பத்திரிகை அறிக்கைகளையிட்டு அரசியல் இலாபம் தேடி வருகின்றார்.
நமது மாகாண மக்களின் இன ஒற்றுமை, அபிவிருத்தி என்பதனை எல்லாம் மறந்து நமது தியாக மனப்பாங்கோடும் கடின உழைப்பாலும் கிழக்கில் ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றார்.
மக்கள் பிரதிநிதிகளாக வருபவர் ஓரு கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் பல வருடங்கள் தியாக மனப்பாங்குடன் செயல்பட்டு அனுபவப்பட்டிருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் கிடைத்தால் அந்த அதிகாரத்தின் ஊடாக நமது மாகாண மக்களுக்கு எல்லா பணிகளையும் எப்படி புரிய வேண்டும் என்ற அனுபவம் உருவாகும்.
கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்ட பின் 2008 ம் ஆண்டு முதல் முதலாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் கிழக்கு மாகாண முதலமைச்சராக திரு.சந்திரகாந்தனை நியமிப்பதற்கு தேசிய காங்கிரஸ் ஆதரவு வழங்கியது.
தமிழர் ஒருவர் முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அறுந்து போயுள்ள இன ஒற்றுமையை உருவாக்கலாம் என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் தெரிவித்தார்கள்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக திரு.சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டதும் அன்று அல்பிரட் துரையப்பா தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டி கொடுத்தது போல் அமைச்சர் அதாஉல்லாவும், நான்கு மாகாண சபை உறுப்பினர்களும் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை காட்டிக் கொடுத்து விட்டார்கள் என்று கிழக்கு மாகாணம் முழுவதும் போஸ்டர்களை சில அரசியல் கட்சிக்காரர்கள் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு காலம் விரைவாக பதில் சொன்னது. தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதனால் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலையில் இருந்த கிழக்கு மாகாணத்தில் விரைவாக இன ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன் வரலாற்று அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டோம்.
அது மாத்திரமன்றி 2012 ம் ஆண்டு 2வது தடவையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்ட போது நமது தமிழ் சமூகம் ஏன் முஸ்லிம் ஒருவர் கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார் என்ற கேள்வி கேட்கவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழரும், முஸ்லிமும் எப்போதும் வரலாம் என்ற வரலாற்றை நாம் பதித்துள்ளோம்.
நமது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலும் இருந்த கிழக்கு மாகாணத்தை மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் விரைவாக அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி நமக்கு பணி புரிந்த நமது ஜனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ஸ அவர்களை நாம் மறந்து விட முடியாது.
நமது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலும் இருந்த கிழக்கு மாகாணத்தை மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் விரைவாக அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி நமக்கு பணி புரிந்த நமது ஜனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ஸ அவர்களை நாம் மறந்து விட முடியாது.
கடந்த 2008 ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை அமைச்சராக நியமிக்கப்பட்டு திருகோணமலை வருவது என்றால் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களை கடந்து 06 மணித்தியாலயங்கள் பிரயாணம்; செய்துதான் திருமலை வந்தோம். இன்று கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, மூதூர், வெருகல் பாலங்கள் அமைக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட வரலாற்று வீதியால் நாம் குறுகிய நேரத்தில் போக்குவரத்து செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரம் யாருக்கு வழங்க வேண்டும், யாரிடம் இருந்து அரசியல் அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்ற தீர்மானம் இறைவனால் தான் தீர்மானிக்கப்படுகின்றது. நமது நாட்டுக்கு பாராளுமன்றத்தில் 225 ஆசனங்கள் தான் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு வேட்பாளர்களும் மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நான் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றால் பாரிய அபிவிருத்தி செய்வேன் என்று வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன் 225 பேர் மட்டுமே பாராளுமன்றம் செல்கின்ற நிலமையை நாம் அறிய முடிகின்றது.
கிழக்கு மாகாண சபையின் விசேட நிதியில் மூதூர்-வேதத்தீவு மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு இந்த கிராமத்தை ஒரு குழுவினர் என்னிடம் காட்டி இந்த கிராமத்திற்குள் செல்வதற்கு பாதுகாப்பு படையினர் அனுமதி தராதிருக்கின்றனர். இக்கிராமத்திற்கு சென்றுவர அனுமதி பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எனது அமைச்சின் அதிகாரத்துடன் இந்த கிராமத்தை பார்வையிட வந்த போது எந்த வீதியும் இல்லை. உடனடியாக பாதுகாப்பு படையினருடன் விசேட கூட்டம் நடாத்தி வேதத்தீவு கிராம மக்கள் அவர்களின் காணிக்குள் சென்று வாழும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கினர்.
இன்று இந்த கிராமத்தை பார்க்கின்ற போது எனது மனம் மிகவும் சந்தோசம் அடைகின்றது. வீடுகள், மின்சாரம், வீதி, பாடசாலை, குடிநீர் வசதிகள், வாழ்வாதார வசதிகள் உருவாக்கப்பட்டு யுத்தத்தினால் பாதிப்படைந்த ஏழை மக்கள் நிம்மதியாக வாழும் நிலைமையை உருவாக்கியுள்ளோம். இயற்கை வளம் நிறைந்த இக்கிராமம் எதிர்காலத்தில் வளர்ச்சி அடைந்த கிராமமாக மிளிரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இக்கிராம மக்களுக்கான விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிதியினை அடுத்த வருட நிதியில் இருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
இக்கிராமத்தினை சகல உட்கட்டமைப்புடன் உருவாக்குவதற்கு தியாக மனப்பாங்கோடு ஒத்துழைப்பு வழங்கிய மத்திய, மாகாண, அரச உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கிராமத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் அனைவரையும் பாராட்டி கௌரவிப்பு செய்யும் நிகழ்வு ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளேன்- என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், உதவிச் செயலாளர் எம்.ஐ. சலாவுத்தீன், கிழக்கு மாகாண கட்டடங்கள் திணைக்கள பணிப்பாளர் அ.வேல்மானிக்கம், கிழக்கு மாகாணத்தின் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் க.அருந்தவராஜா, முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், வீதி அபிவிருத்தி மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment