Thursday, January 2, 2014

நடுக்கடலில் தவித்த இலங்கை அகதிகள்: இந்திய கடற்படை மீட்பு

Thursday, January 02, 2014
ராமேஸ்வரம்::படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், நடுக்கடலில் தவித்த இலங்கை அகதி தம்பதியை, இந்திய கடற்படை வீரர்கள் மீட்டு, தமிழக கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், நிர்மலன், 24; இவரது மனைவி நிஷாந்தினி, 22. இவர்களது, ஒரு வயது மகனுடன், தலைமன்னார் கடற்கரையில் இருந்து, மீன் பிடி படகில், தனுஷ்கோடி வந்தனர். கலையரசன், 34, என்பவர், படகை ஓட்டி வந்தார். இயந்திர கோளாறு ஏற்பட்டு, இந்திய கடல் எல்லையில் படகு நின்றது. ரோந்து சென்ற ராமேஸ்வரம், இந்திய கடற்படை வீரர்கள், படகை பறிமுதல் செய்து, தம்பதியை, ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.

காதல் திருமணம் செய்த தம்பதியினரை, நிர்மலனின் தாய், பிரிக்க முயன்று, டார்ச்சர்' கொடுத்ததோடு, பொய் புகார் கூறி, இலங்கை ராணுவத்திடம் மாட்டி விட முயற்சித்ததால், தப்பி வந்தது, விசாரணையில் தெரிந்தது. படகோட்டி உட்பட நால்வரையும், கடலோர போலீசாரிடம், கடற்படையினர் ஒப்படைத்தனர். அவர்களிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.


 

No comments:

Post a Comment