Monday, January 27, 2014

பலத்த பாதுகாப்புடன் வட மாகாண சபை அமர்வில் ஈ.பி.டி.பி கமல் பங்கேற்பு!

Monday, January 27, 2014
இலங்கை::வட மாகாண சபையின் இந்த வருடத்தின் இரண்டாவது அமர்வு சபையின் தவிசாளர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
 
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சி மாகாண சபை உறுப்பினர் கமலேந்திரன், பொலிஸாரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றார். நிகழ்வின் தொடக்கத்தில் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருக்கின்றது.
 
இன்றைய அமர்வின்போது முள்ளிவாய்க்ககாலில் நினைவுச் சின்னம் அமைப்பது உட்பட்ட பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment