Monday, January 27, 2014

இன்று மீனவர்கள் சமர பேச்சுவார்த்தை பல ஆண்டு பிரச்னை தீருமா?

Monday, January 27, 2014
சென்னை::பல ஆண்டுகளாக தொடரும் பல்வேறு சிக்கல்களுக்கு, இன்றைய இந்திய இலங்கை மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தை தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
 
சிறைபிடித்தலுடன், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள், அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று, சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் நடக்கிறது.
மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைபிடித்தலைக் கைவிட வேண்டும்; பாக் நீரிணை பகுதியில், இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் மீன்பிடி முறைகளையும் முக்கிய கருத்தாக வைத்து பேச்சு நடத்தப்பட உள்ளது. இதில், பல ஆண்டுகளாக தொடரும் மீனவர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என, மீனவர்கள் நம்பிக்கையில் உள்ளனர். ஏற்கெனவே, இதுபோன்று மூன்று முறை நடந்த பேச்சுவார்த்தைகளிலும் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment