Monday, January 27, 2014

தமிழக - இலங்கை மீனவர்களிடையே இன்று பேச்சுவார்த்தை!

Monday, January 27, 2014
சென்னை::தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று  நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை மீன் வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி தலைமையிலான குழு  சென்னை வந்தது.
 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இலங்கை அரசின் சார்பிலும், மீனவப் பிரதிநிதிகள் சார்பிலும் மொத்தம் 15 பேர் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 17_க்கும் மேற்பட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment