Thursday, January 2, 2014

ரூ.10 லட்சம் கொள்ளை முயற்சி: இலங்கை ஆசாமிகள் கைவரிசை?

Thursday, January 02, 2014
சென்னை::திருவொற்றியூரை சேர்ந்தவர் திருப்பூர் சத்தார் (55). இந்திய யூனியன் முஸ்லீக் மாநில செயலாளர். மண்ணடி ராமசாமி தெருவில் வெளிநாடுகளுக்கு பார்சலில் துணிகள் அனுப்பும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.

கடந்த 30ம் தேதி மதியம் 2 பைக்கில் வந்த 4 பேர் கடையில் இருந்த லியாகத், காஜா செரீப் ஆகியோரை வெட்டிவிட்டு  ரூ.10 லட்சம் பணப்பையை எடுத்து ஓடியது. அங்கிருந்த பொது மக்களும் வியாபாரிகளும் அவர்களை விரட்டி சென்ற னர். இதனால் பணமூட்டையை போட்டுவிட்டு கும்பல் தப்பியது.

இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக, வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் சத்தார் பெரும் அளவில் இலங்கைக்கு துணி பார்சல் அனுப்புவது வழக்கம். இதனால், இலங்கை ஆசாமிகள் அடிக் கடி அவரது கம்பெனிக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.

இதனால், அவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா என்றும், கொள்ளையர்கள் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி,இலங்கை ஆசாமிகள் கண்காணித்து திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment