Thursday, January 2, 2014

இலங்கை சிறையில் உள்ள, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர் படகுகளில் கறுப்புக்கொடி!!

Thursday, January 02, 2014
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் உள்ள, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டுள்ளனர்.
 
ராமேஸ்வரத்தில் இருந்து டிச., 29 ல், பாம்பனை சேர்ந்த மூன்று நாட்டுப்படகுகளில் கடலுக்குச் சென்ற 18 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களை ஜன., 10 வரை, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க, ஊர்காவல்துறை கோர்ட் உத்தரவிட்டது.
 
மீனவர்களை விடுவிக்க கோரி, பாம்பன், ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், நேற்று முதல், 300 படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, காலவரையற்ற 'ஸ்டிரைக்கில்' ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள் 18 பேரை, விடுவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராமேஸ்வரத்தில் நேற்று நடந்தது. 
 
நாட்டுப்படகு மீனவர் நலச்சங்கத்தலைவர் ராயப்பன், தலைமை வகித்தார். மீனவர்களை விடுவிக்கக்கோரி,  (ஜன.,2) ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், ஜன.,9 ல் பாம்பனில் உண்ணாவிரதம் இருப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது

No comments:

Post a Comment