இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி சாலோகா பெயனி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (டிச.05) அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளருக்கும் கலாநிதி. சாலோகா பெயனிக்குமிடையே இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை அரசின் அழைப்பிதளின் பேரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கை வந்தடைந்த கலாநிதி. சாலோகா பெயனி இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்ததுடன் அப்பிரதேசங்களில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றும் குறித்தும் மீள்குடியேற்றம் குறித்தும் திருப்தியடைந்துள்ளார்.


No comments:
Post a Comment