Thursday, December 05, 2013
சனா::ஏமன் நாட்டில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நாட்டின் தெற்குப்பகுதி மலைகளில் மறைந்துகொண்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுக்கு ஆதரவாக அமெரிக்க ஆளில்லா விமானம் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தலைநகர் சனாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சக கட்டிடத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக்கொண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பின் தொடர்ந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர். இதையடுத்து அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அப்போது அந்த கட்டிட வளாகத்திற்குள் இருந்த மருத்துவமனையை குறிவைத்தும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை கூறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜூலை மாதம் ராணுவ உடையில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment