Friday, December 6, 2013

சென்னையில் 19-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது!

Thursday, December 05, 2013
சென்னை::சென்னையில் 19_ந் தேதி அ.தி.மு.க.  பொதுக்குழு கூடுகிறது .இது பற்றிய அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் .  
 
5 வட மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏற்காடு இடைத்தேர்தலும் நேற்று முன்தினம்  முடிவடைந்துள்ளது.
தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தமிழகம்_ புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று முதல்_ அமைச்சர் ஜெயலலிதா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று, டெல்லி அரசியலில் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக உள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.
 
மத்திய அரசு செய்து வரும் தவறுகளை முதல்_அமைச்சர் ஜெயலலிதா துணிச்சலுடன் சுட்டிக்காட்டி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.
பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு, தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறியது போன்றவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு_ பொதுக்குழு கூட உள்ளது. இது பற்றிய அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்_அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:_
 
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 19.12.2013 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அ.தி.மு.க.
 
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
அ.தி.மு.க. செயற்குழு_ பொதுக்குழு கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்
முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடையும் விதத்தில் முக்கிய அறிவிப்புகளையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்_அமைச்சருமான ஜெயலலிதா வெளியிடுவார் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment