Thursday, December 5, 2013

மன்னாரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

Thursday, December 05, 2013
இலங்கை::பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று மன்னாரில் இடம்பெற்றிருக்கின்றது.
பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் அழைப்பின் பேரில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருக்கின்றது.
 
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதியை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் சுமார் எட்டு பெண்கள் அமைப்புக்கள் இவ்வேலைத் திட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றன.
 
இதனடிப்படையில் மன்னார் இன்று (05.12.2013) மன்னார் மாவட்ட செயலகத்தின் முன் ஆரம்பித்து பேரணியாக அரச பேரூந்து தரிப்பிடத்தை அடைந்த நிலையில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.
 
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும்ää பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் இடம்பெறற நிகழ்வில் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றிருக்கின்றது.
 
பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
 
இதன் போது மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச்சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
 
அதேவேளை மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி வீதி நாடகமும் இடம் பெற்றிருக்கின்றது. இதனிடையே பெண்கள் உரிமையை வலியுறுத்தி கைகளில் பட்டி அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருக்ன்றது.
 
இதன் பின் மன்னார் அரச பேரூந்து நிலையத்தில் இருந்து விழிர்ப்புனர்வு ஊர்வலம் மன்னார் சுற்றுவட்டம்ää பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் வைத்தியசாலை சந்தியை சென்றடைந்தது.
 
குறித்த நிகழ்வில் சட்டத்தரணிகளான எஸ்.வினோதன், சதக்கத்துல்லா,  மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா,  பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செமாலை,  வாழ்வுதயம் இயக்குனர் அருட்தந்தை ஜெயபாலன்,  மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் மட்டக்களப்பு கலாச்சாரக்குழு பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment