Friday, December 27, 2013

ஜனவரியில் இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை: குர்ஷித் தகவல்Friday, December 27, 201
புதுடெல்லி::இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்திப்பதற்காக நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லி சென்ற அவர்கள் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தை சந்தித்தனர். அப்போது, இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குர்ஷித், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஜனவரியில் நடைபெறும் என்றும் உறுதி அளித்துள்ளார். தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, விஜயன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment