Friday, December 27, 2013

தமிழ் மக்களின் உரிமைகளில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அவர்களது நடவடிக்கையே சாட்சி: ஹெகலிய ரம்புக்வெல!

s273Friday, December 27, 2013
இலங்கை::தெரிவுக்குழுவை நிராகரித்ததன் விளைவுகளை சம்பந்தன் விரைவில் உணர்ந்து கொள்வார்
என ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் .
 
நாட்டில் சமாதானம் நிலவவில்லை . தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிக்கொண்டிருக்கின்றனர் .
 
உண்மையிலேயே தமிழ் மக்களின் உரிமைகளில் கூட்டமைப்பிற்கு அக்கறை இருக்குமானால் அரசாங்கத்துடன் , தெரிவுக் குழு பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பார்கள் .
 
ஆனால் சமாதானத்தையோ நாட்டின் அமைதிச் சூழலையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை .
 
அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
 
காலத்தை வீணடித்து காத்திருப்பதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளே வீணடிக்கப்படுகின்றது .
 
மேலும் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு சரியான முடிவெடுக்கத் தெரியவில்லை . இரு மனதில் தீர்மானமெடுப்பதன் காரணத்தினாலேயே நாட்டில் குழப்பம் ஏற்படுகின்றது .
 
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிருக்குமாயின் தெரிவுக் குழுவில் கலந்துகொண்டு நல்லதொரு தீர்மானத்திற்கு இணங்க முடியும் .
 
ஆனால் இன்னும் அரசாங்கத்தை நம்புவதா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார் .
 
அதேபோல் தெரிவுக் குழுவை நிராகரிப்பதன் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல நல்ல விடயங்களை இழக்கின்றது .
 
இதனை வெகுவிரைவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளங்கிக் கொள்வார் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையோ ஏனைய கட்சிகளையோ நம்பி அரசாங்கம் செயற்படவில்லை . அரசாங்கம் எப்போதும் மக்களை நம்பியே செயற்பட்டு வருகின்றது .
 
கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சர்வதேச ஒத்துழைப்புடன் நாட்டை குழப்பி அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது .
 
இலங்கையின் உண்மை நிலையினை சர்வதேச நாடுகள் விளங்கிக் கொள்வதை விடவும் நாட்டு மக்கள் விளங்கிக் கொள்வதே முக்கியமானது . அதை மக்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
 

No comments:

Post a Comment