Friday, December 27, 2013
இலங்கை::யாழ். மாவட்டத்தில் காரைநகர் மற்றும் வேலனை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பிரதேச செயலகர்களும், மக்கள் பிரதி நிதிகளும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, பொன்னாலை மற்றும் வடமராட்சி கிழக்கு மற்றும் கொழும்புத் துறை மற்றும் அரியாலை கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் காவலரண்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
இங்கு இரவு நேரங்களில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும், இதனை அதிகரிக்க வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. யாழில் பொது மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விசேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், பிராந்திய பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்த கொணஒடிருந்தனர். இதன்போது மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்தரையாடப்பட்டதுடன், இதற்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றதை தடுப்பதற்கு பொலிஸாருடைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பொலிஸ் நிலையங்கள் இல்லாதமை பிரதான காரணமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொன்னாலையில் மணல் மற்றும் மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு அங்கு
பொலிஸார் இல்லை. இதனால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தருவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் தபபித்துச் செல்கின்ற நிலை இருக்கின்றது.
பொலிஸார் இல்லை. இதனால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தருவதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் தபபித்துச் செல்கின்ற நிலை இருக்கின்றது.
இதேபோன்றே ஏனைய இடங்களிலும் பிரதானமாக மணற்கொள்ளை மற்றும் மரங்கள் வெட்டி கடத்துதல் மற்றும் கால்நடைகள் கடத்தல் ஆகிய சட்ட விரோதச் செயல்களும், ஏனைய சமூகவிரோதச் செயல்களும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான சட்ட விரோத மற்றும் சமூக விரோதச் செயல்களினால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது.
இ
தற்கமைய இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களின் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக பொலிஸ் நிலையங்கள் அல்லது பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலமாகவே இதனை கட்ப்படுத்த முடியுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பொலிஸாருடைய ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment