Friday, December 27, 2013

பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது: ஜாலிய விக்ரமசூரிய!

Friday, December 27, 2013
இலங்கை::பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெற்றிகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
 
3 தசாப்தங்கள் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, இலங்கையில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மக்கள் தற்போது சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிரதேசங்களில் துரித பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் துரித அபிவிருத்தியை நோக்கி முன்னோக்கி பயணிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  
 
அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில், இலங்கையர்களும், வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
 
 

No comments:

Post a Comment