Saturday, December 28, 2013
புது டெல்லி::நக்ஸல்களை ஒடுக்க நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் மத்திய, மாநில பாதுகாப்பு படையினரின் கூட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், ஆந்திரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
இது 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தேடுதல் வேட்டையில் மத்திய துணை ராணுவப் படையினர், இந்தோ - திபத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய துணை ராணுவப் படையின் தலைவர் திலிப் திரிவேதி கூறுகையில், பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின் போது ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மா
நிலத்துக்கு நக்ஸல்கள் தப்பி விடுகின்றனர். அதைத் தடுப்பதற்காகவே முதல் முறையாக சுமார் 40 ஆயிரம் பாதுகாவலர்கள் ஒரு நேரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தற்போது செயல்படுத்தப்படுகிறது என்பது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment