Saturday, December 28, 2013
இலங்கை::நாடாளுமன்றத் தேர்வுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தை கடுமையாக தினேஸ் குணவர்தன விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆளும்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்தன, தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு சிறுபிள்ளைத் தனமானது என வர்ணித்துள்ளார். சர்வதேச அரசியல் இலாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்வுக்குழு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கருதுவது ‘சிறுபிள்ளைத்தனமானது’ என்றும் தினேஸ் குணவர்தன கூறினார்.
வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த சந்தர்ப்பத்தில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியிலான அழுத்தத்தங்களை சுமத்த இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த கூட்டமைப்பு முயல்கிறது. சர்வதேச ஊக்குவிப்பில் உயிர்வாழ்கின்ற தரப்பினர், இந்த தேர்வுக் குழுவை எதிர்க்கின்றனர் என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
No comments:
Post a Comment