Saturday, December 28, 2013
இலங்கை::மரண தண்டனை குறித்த சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை தொடர்பிலான குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. நீதி அமைச்சினால் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.ஓய்வு பெற்ற நீதவான் பேராசிரியர் பீ.
ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது பூர்த்தியாகும் என்பதனை உறுதியாக சொல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகம், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், 1976ம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2000மாம் ஆண்டு முதல் இதுவரையில் 1200 மரண தண்டனைக் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எதிரிசூரிய தலைமையிலான குழுவொன்றினால் சட்டத் திருத்தம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது குறித்து ஆராய்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையிலான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment