Saturday, December 28, 2013

வட, கிழக்கில் (பலியான புலிகளை இணைத்து ) தனியான கணக்கெடுப்பை நடத்த தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு தீர்மானம்!

Saturday, December 28, 2013
இலங்கை::மோதலின்போது (பலியான புலிகளை இணைத்து ) உயிர் மற்றும் பொருள் இழப்புகளை கணக்கிடுவதற்கான அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு மாற்றாக வடக்கிலும் கிழக்கிலும் தனியான கணக்கெடுப்பை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திட்டமிடுகின்றது.

தனது கட்சியினர் அரசாங்கத்தின் கணக்கெடுப்பை நம்பகமானதென அங்கீகரிக்கவில்லையென இரா.சம்பந்தன் கூறினார்.

அந்த வகையில் அரசாங்கம் எவரையும் தவறாக வழிநடத்துவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அவர் கூறினார்.

அரசாங்கம், ஜெனீவாவில் சில பிரச்சினைகளை தாண்டுவதற்காக இதை செய்யக்கூடும். ஆனால் எமக்கு எமது மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சனை; என அவர் கூறினார்.

தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதனால் உண்மையை நிலைநிறுத்த தனது கூட்டமைப்பு விரும்புகின்றதென அவர் கூறினார்.

ஆயினும் இதனை எவ்வாறு தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற விவரங்களை வெளியிடுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment