Saturday, December 28, 2013

இலங்கையில் பிற மதத்தவரின் ஆதிக்கங்களை ஒரு போதும் நாம் விடமாட்டோம் முஸ்லிம் தீவிரவாதத்தை பரப்புவதைப் போல் இந்து பிரிவினை வாதமும் தலை தூக்குகின்றது: பொதுபல சேனா!

Saturday, December 28, 2013
இலங்கை::நாட்டை ஆள்வது சம்பந்தனா,ஜனாதிபதியா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. பௌத்த மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இருந்தும் கூட்டமைப்பை நாடுவது ஏன் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
 
இலங்கையில் பிற மதத்தவரின் ஆதிக்கங்களை ஒரு போதும் நாம் விடமாட்டோம் முஸ்லிம் தீவிரவாதத்தை பரப்புவதைப் போல் இந்து பிரிவினை வாதமும் தலை தூக்குகின்றது எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர்  கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
 
"நாட்டில் இன்று கூட்டமைப்பின் பேச்சே அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விடவும் சம்பந்தன்இ விக்கினேஸ்வரன் ஆகியோரின் கருத்துக்களே அதிகமாக பேசப்படுகின்றது. உண்மையிலேயே இலங்கையில் ஆட்சி நடத்துவது ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷவா அல்லது சம்பந்தனா என்பதில் பெரியதொரு சந்தேகமாகவே உள்ளது.
 
பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள போதும் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கெஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை. உண்மையிலேயே சிறுபான்மை மக்களிடம் அக்கறை வைத்திருந்தால் கூட்டமைப்பினர் என்றோ அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் தனித்தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கத்துடனேயே அரசாங்கம் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தீர்வு காண்பதை விடவும் பௌத்த அமைப்புக்களுடன் பேசி நாட்டை பலப்படுத்துவது சிறந்தது.
 
மேலும் இலங்கையில் இன்று ஏனைய மதத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. முஸ்லிம் தீவரவாதிகள் தமது இனத்தவரை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் கிறிஸ்தவர்கள் பிரிவினை சக்தியாக உருவாகி வருகின்றனர்.
 
இந்நிலையில் அரசாங்கம் மீண்டும் மீண்டும் நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் தமிழ் தீவிரவாதத்திற்கும் வழி ஏற்படுத்திவிடக்கூடாது. நாம் ஒருபோதும் தமிழர்களை ஒடுக்கவில்லை. எனது அரசாங்கம் தமிழர்கள் மீது அக்கறை கொண்டதனாலேயே 30வருட கால யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்தனர். இதனை ஒவ்வொரு தமிழ் குடிமகனும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
 
அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்ற பிரிவினைவாதிகளுக்கு இடம்கொடுத்தால் மீண்டும் ஒரு முறை நாட்டில் குழப்பகரமான போர் சூழல் உருவாகும் என்பதனை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது" என அவர் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment