Saturday, December 28, 2013

தமிழக மீனவர்கள் குர்ஷித்துடன் சந்திப்பு!

Saturday, December 28, 2013
புதுடில்லி::தமிழகத்தின், நாகபட்டினம், கோடியக்கரை பகுதிகளைச் சேர்ந்த, 118 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி, கைது செய்துள்ள, இலங்கை கடற்படை, திரிகோணமலை சிறையில் அடைத்துள்ளது.
இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க கோரி, மீனவ சங்க பிரதிநிதிகள், உண்ணாவிரதம் இருந்தனர். இந்நிலையில், மீனவ சங்க பிரதிநிதிகள், நேற்று டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி, கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:
 
கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். இதற்காக, ஜனவரி முதல் வாரத்தில், இருநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில், பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது, உரிய முறையில், சுமூக தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment