Thursday, December 05, 2013
ராமேஸ்வரம்::இலங்கையில் இருந்து படகில், 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்
கடத்திய கும்பலை, தமிழக கடலோர உளவு போலீசார் பிடிக்காமல் கோட்டை விட்டனர்.
இலங்கை,
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து, விமானங்களில் கடத்தி வரப்படும் தங்கத்தை,
சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதால், கடல் வழி கடத்தலில், பலர்
ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம், இலங்கையிலிருந்து வந்த, ராம்ஜி என்பவரும்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவரும் இணைந்து, தங்கம் கடத்த
திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை, ராம்ஜி
சந்தித்துள்ளார். அப்போது, நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது, இலங்கை மீனவர்கள்
தரும், "பார்சலை' வாங்கி வாருங்கள், அதற்கு கூலியாக, 30 ஆயிரம் ரூபாய் தருகிறோம்'
என, கூறியுள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்ட, அந்த மீனவர், இருமுறை பார்சலை வாங்கி
வந்து, ராம்ஜியிடம் ஒப்படைத்து, கூலியாக, 60 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
மூன்றாவது
முறை கடத்தி வந்த போது, பார்சலை பிரித்து பார்த்த மீனவர், அதில், 1.5 கிலோ தங்க
கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், படகை கரையில் நிறுத்தி விட்டு,
தங்க கட்டியுடன் தலைமறைவானார். இதற்கிடையில், தங்க கடத்தலில் ஈடுபட்ட, ராம்ஜி பற்றி
தகவல் அறிந்து, அவரை பிடிக்க, தமிழக கடலோர உளவு போலீசார் திட்டமிட்டனர்.
ஆனாலும்,
கடைசி நேரத்தில் கோட்டை விட்டனர். கடல் பாதுகாப்பை தாண்டி, பெரிய அளவில், தங்க
கடத்தல் நடந்துள்ளது, போலீசாரை திகைப்படைய வைத்துள்ளது. தங்க கடத்தலுக்கு
பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment