Thursday, December 05, 2013
சென்னை::இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த, 15 இலங்கை மீனவர்களை கடலோர
காவல்படையினர் சுற்றி வளைத்து உள்ளனர்.
ஆந்திர கடலோரத்தில் கிருஷ்ணாம்பட்டினம்
அருகே நேற்று முன்தினம் மதியம், மூன்று படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை
இந்திய கடலோர காவல்படையினர் சோதனையிட்டதில், அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது
தெரியவந்தது.
இதையடுத்து மூன்று படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, 15 இலங்கை
மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்து, நேற்று இரவு, துறைமுக போலீசாரிடம்
ஒப்படைத்தனர்.

No comments:
Post a Comment