இலங்கை::அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த காரணத்தினால் இலங்கைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிடமிருந்து இலங்கை மசகு எண்ணெய் இறக்குமதி செய்திருந்தால், குறைந்த செலவு ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய மசகு எண்ணெய்களை சுத்திகரிக்கும் வகையிலேயே இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக இலங்கை வேறும் நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலதிகமாக ஏற்பட்டுள்ள செலவுகளை அமெரிக்கா பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பாதக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment