Friday, December 27, 2013

சர்வதேச சமூகம் இலங்கை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்!

Friday, December 27, 2013
இலங்கை::சர்வதேச சமூகம் இலங்கை மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களின் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை நல்ல வழியில் இட்டுச் சென்று கட்டியெழுப்பக் கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளன, 11000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வலயத்தில் பாரியளவில் உட்கட்டுமான மேம்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் நன்மைக்கு வழிகோலாது எனவும், பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment