Friday, December 27, 2013

புலி ஆதரவு இந்திய ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட உள்ளார்!

Friday, December 27, 2013
இலங்கை::இந்தியாவின் பிரபல சஞ்சிகை ஒன்றின் (புலி ஆதரவு) ஊடகவியலாளரான தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு இடம்பெயர் மக்கள் முகாம்கள் மற்றும் இராணுவ முகாம்கள் பற்றிய தகவல்களை திரட்டியதாகவும் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபாகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி காவல்துறையினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்துள்ளனர், வீசா விதிகளை மீறி செயற்பட்டதாக பிரபாகரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், பிரபாகரனை திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது,

No comments:

Post a Comment