இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இந்தியப் பிரஜைகள் இருவரை நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைகள் இருவரையே கைதுசெய்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவரும் கணவன், மனைவி எனவும் பொலிஸார் கூறினர்.
தமிழ்நாட்டின் எந்தையூரைச் சேர்ந்த கோப்பையன் மாரியப்பன் (வயது 39), மாரியப்பன் சமணதேவி (வயது 39) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment