Sunday, December 29, 2013
சென்னை::யார் இந்த மகா. தமிழ் பிரபாகரன்:!! தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் சிறீதரன் மீது மற்றும் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் இது போன்ற மோசமான நிலைமைகள் எதிர்காலத்தில் வரும்!!
*அவரை எனக்கும் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாது புலிகூட்டமைப்பின் அரசியல் ஜாம்பவான்.சிறீதரன்!!
ஏதோ தனது தேவைக்கு அழைத்து வந்து ஒன்றாக தங்கியிருந்து ஒரே ஜீப்பில் செல்கையில் பிடிபட்ட அந்த தமிழ்நாட்டுப் பத்திரிகையாளரைத் தனக்குத் தெரியவே தெரியாது என்பது போலக் கையை விரித்துவிட்டாராம் வன்னித் தமிழ்க் புலிகூட்டமைப்பின் அரசியல் ஜாம்பவான்.சிறீதரன் முதலில் நண்பர் என்றார், பின்னர் உறவினர் என்றார். நல்லவேளை உளவாளி என்று கூறவில்லை. சட்டவிரோதச் செயல் களைத் தாமாகவே செய்துவிட்டு அரசாங்கத்தின் மீது பழி போடுவதில் இவர்களை விஞ்ச யாருமில்லை.
காமன்வெல்த் மாநாடு நடந்தால் தமிழ் இனத்தையே அழித்து விடும் சிங்கள அரசு: வைகோ
காமன்வெல்த் மாநாடு நடந்தால் தமிழ் இனத்தையே அழித்து விடும் சிங்கள அரசு: வைகோ
| |||||
Posted Date : 14:33 (11/08/2013)Last updated : 14:33 (11/08/2013)
சென்னை: "காமன்வெல்த் மாநாடு அங்கு நடந்தேறி விட்டால் கொக்கரிக்கும் சிங்கள தேசம், ‘தமிழன்‘ என்ற இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
"புலித்தடம் தேடி" ரத்த ஈழத்தில் 25 நாட்கள் என்று மகா.தமிழ்ப் பிரபாகரன் எழுதிய இலங்கைப் பயணத்தை பற்றிய புத்தகத்தின் அறிமுக கூட்டம் நேற்று (10ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைப்பெற்றது.
இந்தநிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஓவியர்.புகழேந்தி, இயக்குநர்.வ.கௌதமன், திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை பற்றி கருத்துரையாற்றினர். இதன் போது பேசிய வைகோ,‘இந்த நூலில் இதயத்தை வேதனையில் வாட்டுகிற பல செய்திகள் இருக்கின்றன. கனத்த இதயத்தோடு தான் இதை படித்து முடித்தேன். இந்நூல் தொடராக வெளிவந்த போது படித்ததை விட புத்தகமாக தொடர்ந்து படிக்கிற போது ஒரு தாங்கமுடியாத சோகம் மனதை கப்பிக் கொண்டது. மகா துணிச்சல் வேண்டும். உயிரோடு திரும்ப முடியாது என்ற ஆபத்தை எதிர்கொண்டு போயிருக்கிறார் இந்த இளைஞர்.
கொழும்பு விமான நிலையத்தில் இறங்கி அவர் பயணத்தை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே ராணுவம் விசாரித்ததும் போலீஸ் விசாரித்ததும் அடுத்து என்ன நடக்கும் என்ற விதத்தில் அபாயம் அவரை சூழ்ந்ததும் எச்சரிக்கையோடு மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிலைமையை பதிவு செய்திருக்கிறார்.
பரந்தனிலே கிளிநொச்சியிலே முல்லைத்தீவிலே யாழ்நகரிலே வல்வெட்டித்துறையிலே நந்திக்கடலிலே முள்ளிவாய்க்காலிலே புதுக்குடியிருப்பிலே புதுமாத்தளனிலே அந்த மரண ஓலம் ஒலித்து கொண்டிருந்த பகுதியிலே மகா.தமிழ்ப் பிரபாகரன் சென்று வந்திருக்கிறார் என்று தன் உரையை புத்தகத்தின் ஆய்வுரையாகவே எடுத்து வைத்தார்.
மேலும் தன் உரையில் வைகோ, "காமன்வெல்த் மாநாடு அங்கு நடந்தேறி விட்டால் கொக்கரிக்கும் சிங்கள தேசம் "தமிழன்" என்ற இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடும்" என இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை பற்றிய எச்சரிக்கையோடு "புலித்தடம் தேடி" புத்தக அறிமுகக் கூட்டம் நிறைவுப் பெற்றது. ஈழம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு செலுத்தும் முக்கியத்துவத்தில் பத்து வீதம் கூட அங்குள்ள மக்கள் மீது செலுத்தவில்லை. – புலித்தடம் தேடி… மகா.தமிழ்ப் பிரபாகரன்.
இளம் பத்திரிகையாளர், கவிஞர், ஆவணப்பட இயக்குநர் என பன்முக ஊடகங்களில் தனித்த ஆளுமையுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் மகா.தமிழ்ப் பிரபாகரன்.
சமகாலத் தமிழ் ஊடக அரசியலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் இவருடையது.
ஒரு கவிதைத் தொகுப்பும் (நானும் வாடியப்பயிர்) ஒரு பாடல் ஒலி குறுந்தகடும் (யுத்தம் செய்வோம் – மரணத் தண்டனைக்கு எதிரான பாடல்கள்) இதுவரை வெளியாகியுள்ளன.
ஜுனியர் விகடனில் இவரின் புலித்தடம் தேடி.. இவரை தமிழுலகிற்கு பரவலாக அறிமுகப்படுத்தியது. ஈழத்தின் பல மாகாணங்களுக்குச் சென்று நேரடியான பல தகவல்கள் தந்த அவரிடம் எழுத்துகள், பயணம், நிகழ்வுகள் பற்றி திசைகாட்டிக்காக ஒரு நேர்காணல்.
உங்களைப்பற்றி…?
படித்தது வளர்ந்தது எல்லாம் தர்மபுரி – சேலம் – நாமக்கலிலும் தான். அப்பா பெரியாரிய சிந்தனைக் கொண்டவர். அதனாலேயே இப்பெயரும் எனக்கு வைக்கப்பட்டது. நான் எட்டாவது படிக்கும் போது அப்பா இறந்து விட்டார், பின் எல்லாமும் அம்மா மட்டும் தான். கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி சென்ற வாழ்க்கை அப்பாவின் இறப்புக்கு பின் மீண்டும் கிராமத்துக்கே கூட்டி வந்தது. கல்லூரியின் போது மீண்டும் சேலம் நகரம். கல்லூரி நாட்களில் நான் படிப்புக்கு அப்பாற்பட்டு செய்த எழுத்து பணிகளுக்கும் மாணவ நிருபராக விகடனில் சேர்ந்ததற்கும், பெரிதும் உறுதுணையாக இருந்தது என் அம்மா. இன்று நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணமும் அம்மா தான்.
விரும்பி எடுத்த படிப்பு தான் என்றாலும் நான் கல்லூரி படிப்பை தொடங்கிய செப்-2008 காலம் ஈழப் போர் உக்கிரத்தை தொட ஆரம்பித்த நேரம். மே 2009 தமிழர்களின் பின்னடைவை மனம் ஏற்றக்கொள்ளாத நேரம். தொடர்ச்சியாக அது வேறு வேறு அரசியலுக்குள்ளும் படிப்பினைக்குள்ளும் என்னை கொண்டு சென்றது. இதன் தொடர்ச்சியே என்னை மேலும் மேலும் எழுதவும் வைத்தது.
இப்போது தமிழகம் அறிந்த பிரபல நிருபர்களில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?
பிரபல நிருபர் எல்லாம் பெரிய வார்த்தை, கவனத்தை ஈர்த்த நிருபர் அவ்வளவே. யாரும் எதிர்பாராத நேரத்தில் ‘புலித்தடம் தேடி’ தொடர் வெளிவந்ததும் , இதற்கான விளம்பரம் வெளிவரும் நேரத்தில் ‘ஈழ விசயத்தில் மீண்டும் மற்றோர் உசுப்பேத்தும் தொடர் என்றும், விகடனிலிருந்து யாரோ ஒருவர் இன்பச் சுற்றுலா போய் வந்துள்ளார் என்றும்’ எனக்கு தெரிந்தவர்களாலேயே விமர்சனங்கள் எழுதப்பட்டன. ஆனால் அவை யாவையும் இத்தொடரின் செய்திகள் தகர்த்தது, அவர்கள் பின் வாயடைத்து போனதையும் நான் அறிந்தேன். ‘புலித்தடம் தேடி…’ எனக்கான அடுத்த தேடலையும், என் வாழ்வை பத்திரிகை துறையிலேயேயும் தொடரச் செய்துள்ளது.
உங்களின் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள் பற்றி கூறுங்கள்?
என் ஆளுமையில் தாக்கம் செலுத்தியதில் பெருமளவு பங்கு கொண்டவர் என் அப்பா. அவர் இருந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட அறிவு ரீதியான தாக்கங்களை விட ‘அவர் இறப்பில் ஏற்பட்ட மரணத் தாக்கமே’ என் எழுத்துக்களை ஆட்கொண்டுள்ளது. ‘மனிதத்தின் மீதான முதல் தாக்கத்தையும் வேட்கையும்’ எழச் செய்தது அப்பா தான். என் பள்ளி காலத்தில் ஏற்பட்ட இந்த மரணத் தாக்கமே ஒவ்வொரு மனித உயிரின் உன்னதத்தையும் எனக்கு அறிய செய்தது.
பல ஆண்டுகள் கழித்து என் அப்பாவை போலவே ஓர் மனிதரை நேர்மைமிக்கவரை சந்தித்தேன் என்று சொன்னால் , அது ‘ப.திருமாவேலன்’. அவரே எனக்கு பத்திரிகை துறையின் மீதான தாக்கத்தையும் தாகத்தையும் எழச்செய்தவர். இவர்கள் இருவரும் தான் எதார்தத்தில் என் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள்.
அதை போக ‘மனிதத்தை நேசிக்க தெரிந்தவர்கள்’ யாவருமே என் ஆளுமையில் தாக்கம் செலுத்தியவர்கள்தான்.
தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் எப்படி இருக்கிறது?
தமிழில் இன்றைய எழுத்துச் சூழல் விகிதாச்சார ரீதியாக பார்த்தால் குறைந்து கொண்டே தான் வருகிறது. 40 வயதுக்கு மிகுந்தவர்களே தமிழின் எழுத்துச் சூழலை பெருமளவு ஆக்கிரமித்துள்ளனர். புதிதாக வருபவர்கள் இவர்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டுமே பார்க்கப் படுகின்றனர். புதிதாக வரும் இளையோர்களை தட்டிக்கொடுத்து போகும் போக்கு தமிழ் எழுத்துச் சூழலில் அருகி வருகிறது என்று சொல்லும் நிலையே உள்ளது. இதற்கு உதாரணம் காவல்கோட்டம் எழுதிய வெங்கடேசன் அவர்களையும் தூப்புகாரி எழுதிய மலர்வதி அவர்களையும் மூத்த எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்பவரகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், தள்ளிவைத்து பார்க்கப் படுகின்றனர். மூத்த எழுத்தாளர்கள் இவர்களை விமர்சிப்பது தவறல்ல, ஆனால் எழுத்துச் சூழலலிருந்து இவர்களை ஒதுக்குவதற்காக விமர்சிப்பது தவறு. இது எழுத்துச் சூழலுக்கு வரும் இளைஞர்களுக்கு ஆரோக்கியமற்ற சூழலை ஏற்படுத்தும். ஒருவரின் எழுத்தையும் அனுபவத்தையும் வயதை வைத்து பார்க்க கூடாது ,’செயலை வைத்து பார்க்க வேண்டும்’. அப்படியான நிலைமை தமிழ் சூழலில் இல்லை, வயதை வைத்தே தகுதி உட்பட அனைத்தும் நிர்ணயிக்கப் படுகிறது.
ஒரு பயணியாக தமிழீழம் இன்று அடைந்திருக்கும் மாற்றம் குறித்து உங்களுக்குச் ஏதாவது சொல்ல இருக்கிறதா?
இன்று தமிழீழம் அடைந்துள்ள மாற்றம் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் தான். இப்போது ஈழ அரசியல் என்பது குறிப்பிட்ட பகுதியின் அரசியல் என்பதிலிருந்து சர்வதேச அரசியலாக மாறி இருக்கிறது. இங்கு நாம் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு செலுத்தும் முக்கியத்துவத்தில் பத்து வீதம் கூட அங்கு வாழும் மக்கள் மீது செலுத்தவில்லை. ‘அதை இனியாவது செய்ய வேண்டும்’ ஓர் பயணியாக சொல்ல விரும்புவது.
அங்கு உள்ள தமிழர்களின் நிலைப்பற்றிச் சொல்லுங்கள்?
சொல்ல என்ன இருக்கிறது, ‘நிர்கதிகள்’ !
நீங்கள் எழுதிய புலித்தடம் தேடி… பகுதியில் உங்கள் மனதை மிகவும் பாதித்த பகுதி எது?
இந்த முழுத்தொடரும் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பினால்,அம்மக்களின் வலியை கண்டதால் எழுதப்பட்டது என்றாலும் ‘என் ஆழ் மனதை தெய்த்தது புது மாத்தளன் தான். இன்று வரை கடலையும் மணல் திட்டுகளையும் வெகுநேரம் பார்த்தப்படி இருக்க முடிவதில்லை, இவை என் கண்களை தானாக கலங்க செய்கிறது. மீண்டும் அந்த மண்ணிற்கு என்று செல்வேன் என்ற ஏக்கம் தான் என் மனமெங்கும் நிரம்பி கிடக்கிறது. மீண்டும் அம்மண்ணிற்கு செல்லும் போது அது ‘விடுதலை தமிழீழமாக இருக்க வேண்டும்’ என்பதே ஏக்கத்தில் உள்ள நோக்கம்.
விடுபட்ட நிகழ்வுகள் அல்லது இடங்கள் இன்னமும் அந்த தேசத்தில் சேகரிக்க வேண்டிய செய்திகள் உள்ளதா?
நான் புலித்தடம் தேடி தொடரில் இன்றைய இலங்கையை பற்றி எழுதியது சிறு எச்சங்களே. ஒவ்வொரு ஈழவனின் நெஞ்சிலும் ஆயிரக்கணக்கிலான வலிகள் மிகுந்த சம்பவங்கள் இருக்கிறது. இன்னும் செல்ல வேண்டிய இடங்கள், எழுத வேண்டிய நிகழ்வுகள், சேகரிக்க வேண்டிய செய்திகள் எக்கச்சக்கமாய் உள்ளது. அதை நோக்கிய தேடல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்…..
புலித்தடம் தேடி…இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 09
Posted by on January 26th, 2013 03:20 AM | சிறப்புக் கட்டுரைகள்
பிரபாகரனின் வன வீடு, உளவுநோக்கிகளின் (ரேடார்) கண்களுக்கே தென்படாத நிழல் பகுதியாக இருந்தது. புதுக்குடியிருப்பு நகரில் இருந்து ஒட்டுசுட்டானுக்குச் செல்லும் வழியே உள்ள காட்டிலேதான் இந்த வீடு இருந்தது.
வரி உடுப்பின் கிழிசல்கள் பசுமைப் போர்வைபோல் வீட்டின் காற்றுவெளிகளில் மூடப்பட்டு உள்ளது. இந்த வனமும் போருக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இலங்கை இராணுவம் கொடுத்துள்ள பெயர்: ‘தீவிரவாதியின் நிலத்தடி மறைவிடம்’. (Terrorist Under Ground Hideout) இந்த அறிவிப்புப் பலகை அந்த இடத்தில் பளிச்சிடுகிறது.
கிடைத்த தகவல்படி முள்ளிவாய்க்காலுக்கு முன்னான தீவிரவாதத் தலைவர்களின் குடும்பத்தின் இருப்பு இங்குதான் இருந்தது. புலனாய்வுப் பிரிவின் தகவல்படி ஒட்டுசுட்டான், விசுவமடு பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்குப் பின் தலைவர் இவ்விடத்தைக் காலி செய்துவிட்டார் என்றும் அங்கு எழுதப்பட்டு உள்ளது.
இடமும் வலமும் துவக்கு மண்ணை நோக்கி வணங்குவதுபோல் நிற்க, ஈழ வரைபடத்தின் நடுகில் மெழுகுவர்த்தி எரிவதுபோல் முன் அரண் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட குடில் ஒன்று இருந்தது. வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னே இருக்கிற இந்தக் குடில்தான் பிரபாகரன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.
மரக்குச்சிகளில் அமர்விடம், மரங்களின் அடர்த்திகள் இடையே புகுந்து வரும் ஒளிக்கீற்றுகள், இயற்கையை சீர்குலைக்காத கட்டமைப்பு, மரங்களோடு ஒன்றிய முள்வேலிகள் என அந்த வீட்டின் புவியியல் அமைப்பு அவ்வளவு கச்சிதமானது.
வீட்டைச் சுற்றியுள்ள மூன்றடுக்கு முள்வேலிகளை மீறி உள் காட்டுப்பகுதியில் இருந்து இன்று நகர்ந்தாலும்கூட இந்த வீட்டை அடைய முடியாது என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
சிறப்புக் காவல் அரணோடு வீட்டின் முகப்பு. உள்ளே நுழைய சாதாரண வீடுபோலதான் தெரிந்தது. ‘அங்குள்ள ஒரு கதவைத் திறந்தால், மேல் இருந்து கீழே உள்ள மூன்று மாடிகளுக்குச் செல்லலாம்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களுக்கு இராணுவம் வீட்டின் அறிமுகத்தை கொடுத்துக் கொண்டிருக்க… திறந்தே வைக்கப்பட்டு இருக்கும் கதவின் வழியாக நுழைந்தோம்.
கீழே இறங்கும் படிகள் ஓரம் உள்ள சுவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளை போடப்பட்டு இருந்தன. முதல் மாடி நுழைவில் உள்ள கதவு மரத்தால் ஆனதாகவும், இரண்டாவது மாடி நுழைவில் உள்ள கதவு இரும்பால் ஆனதாகவும், மூன்றாவது மாடியில் உள்ள கதவு கடும் இரும்பால் ஆனதாகவும் இருந்தன.
தரையில் இருந்து கீழே செல்லச் செல்ல, சுவாசிக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில், சுவாசிக்க ஏதுவாக வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன வசதிகள் அனைத்தும் இராணுவத்தின் கைப்பற்றலுக்குப் பின் அகற்றப்பட்டு விட்டன.
இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் இருந்து நேரடியாகத் தப்பி மேல் வர சுரங்கப் பாதைகளும் இருந்தன. நடவடிக்கை அறை, உரையாடல் கூடம், பிரபாகரன் அறை என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு இருந்தன. வீட்டைச் சுற்றி துப்பாக்கிப் பயிற்சி இடம், ஜெனரேட்டர் அறை, சமையல் அறை, தண்ணீர்தொட்டி, நிலத்தடி வாகன நிறுத்துமிடம் என சகலமும் இருந்தன.
இலங்கையில் இப்படி ஒரு வீடு வேறு எங்கும் இல்லையாம்’ என்றும், ‘ஜப்பான் முறைப்படி கட்டப்பட்ட வீடு’ என்றும் சிங்களவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
புலிகள் இருந்தபோது, இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்காக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டது. புலிகள் நினைத்து இருந்தால் காட்டுக்குள்ளே மின்சார இணைப்புகளைக் கொண்டுவந்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஜெனரேட்டரைத்தான் மின் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளனர்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இதுதான் இப்போது இருக்கிறது.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியே வந்து திரும்பும் முனையில், இராணுவத்தால் கடைசி நேரத்தில் அழிக்கப்பட்ட புலிகளின் இரும்புக் கவச வாகனம் வெற்றி அறிவிப்போடு காட்சிப் பொருளாக உருக்குலைந்து கிடந்தது.
அடுத்து, இரணப்பாலை காட்டுப் பகுதியில் இருந்த புலிகளின் நீச்சல் குளத்தை நோக்கி புதுமாத்தளன் ஊடாகச் சென்றோம். இடையில் இடிந்தும் உடைந்தும் கிடைக்கும் பள்ளிகளைப் பார்க்கும் போது மூத்த போராளி கூறிய போர்க்கால சம்பவம் ஒன்று நினைவில் சிறைப்பட்டது.
முள்ளிவாய்க்கால்ல ஒரு பள்ளிக்கூடத்தைதான் ஹோஸ்பிட்டலாக வைச்சிருந்தாங்க. என்னோடு இருந்த பொடியனோட மனைவி காயப்பட்டுட்டா. உடனே அவங்களை இந்தப் பள்ளிக்கூட ஹோஸ்பிட்டலுக்குதான் கொண்டுபோனம். அவளுக்கு வயத்துல காயம். கர்ப்பிணியா இருந்தவ.
டாக்டர்லாம் பங்கர்க்குள்ள இருந்தாங்க. நான் சொன்னன்… ‘ஒரு தடவ வந்து பாருங்க’னு. டாக்டர் வரல. ‘நீங்க போங்க’ என்றார். நான் எப்படியாவது காட்டணோம்னு சொல்ல, அவர் டீ குடிச்சுக்கொண்டே ‘நீங்க போங்க வாரன்’ என்றார்.
அதுக்குள்ள அப்பிள்ளை செத்துடுச்சு. அந்தப் பிள்ள செத்து ஒரு நிமிஷத்துக்குள்ள டாக்டர் இருந்த பங்கர்குள்ள செல் விழுந்து, அவங்க குடும்பத்தோட இறந்து போனாங்க. நான் சொன்னதைக் கேட்டு அவர் வந்திருந்தா, தப்பி இருக்கலாமோ என்று தெரியல. அவரும் பயத்துல பங்கர்ல இருந்துட்டார்.
செத்த பிள்ள பேர் தமிழ்கவி. இயக்கத்தில் போராளியா இருந்த பெண்” என்றார். பள்ளிக்கூடங்களைப் பார்த்தபோது இந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.
இறுதி நேரத்தில் மருத்துவ வசதி இன்றி மருத்துவமனையாக மாறிய பள்ளிக்கூடத்தையும் அம்புலன்ஸ் வான்களையும் இராணுவம் குறிவைத்துத் தாக்கியதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம்.
இந்தக் கதைகளைச் சொல்ல முடியாமல் அமைதியாய் நிற்கின்றன அந்தக் கட்டடங்கள்.
ஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
புதுக்குடியிருப்பை இயக்கம் தன் கட்டுப்பாட்டுல வெச்சிருந்த காலத்தில், நான் மளிகைக் கடை வெச்சிருந்தன். கடைப் பொருட்களை கொழும்புல இருந்து வாங்கி வந்தா, ஓமந்தை எல்லையில இயக்கத்துக்கு வரி கட்டணும். மறுபடியும் கடைக்குக் கொண்டுவந்த பிறகும் வரி கட்டணும். வரி விதிப்பு எல்லாவற்றுக்கும் அதிகம்.
ஆனா, இயக்கக் காலத்துல களவு பயம் இல்லை. களவு எடுத்தவன் பிடிபட்டால், தண்டனை பயங்கரமானதாக இருக்கும். களவு நடந்தால் 24 மணி நேரத்துக்குள்ள களவு எடுத்தவன் சிக்கிடுவான். ஆனா, இன்னைக்கு பொலீஸுக்கு சாராயப் பாட்டிலும் காசும் தந்துட்டே களவு நடக்குது.
போலீஸுகிட்டயோ ஆமிக்கிட்டயோ களவு போச்சுனு சொன்னா, எங்களைத்தான் கடுமையா விசாரிக்கிறாங்க. இயக்கக் காலத்துல சட்டம்னா எழுத்துல இல்ல, நடப்பு வாழ்க்கையில இருந்துச்சி. ஆனா, இன்னைக்கு அப்படி இல்லை” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
அதற்குள் காட்டுக்குள் உள்ள புலிகளின் நீச்சல் குளத்தை வந்தடைந்தோம். 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் 83 அடி நீளமும் 22 அடி ஆழமும் கொண்டது.
நமக்குத் தகவல் கொடுத்தவர்களின் கூற்றுப்படி, இது கடற்புலிகளின் பயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் கடற்புலிகளும் இங்குதான் முழுப் பயிற்சி எடுப்பார்கள்” என்ற இராணுவத் தரப்பு விளக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
அந்தக் காட்டுக்குள் அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்குள் ஒரு புத்தக் கோயில் இப்போது கட்டப்பட்டு உள்ளது. அரச மரமும் மண்ணில் ஊனப்பட்டு உள்ளது. ஆளே இல்லாத காட்டில் எதுக்கு புத்த கோயில்னு புலம்பினார் ஓட்டுநர்.
புத்தக் கோயில்கள் அனைத்தும் சிங்களத்தின் வெற்றியை குறிப்பதாகவும், தமிழர்களின் தோல்வியை கேலிப்படுத்துவதாகவும் தான் விளங்கின.
நாங்கள் கிளம்பியபோது வந்த ஆமி கப் போட்ட ஒரு ஆள், ‘எதுக்குப் பெரிய கமராவில் படம் எடுக்கிறீர்கள்?’ என்றார். நான் ஆங்கிலத்திலேயே பேச, மொழித் தடுமாற்றத்தில் ‘ஓகே ஹரே’ (போகலாம்) என்று சொன்னார். ஆங்கிலத்தில் பேசினால், எளிதில் தப்பிக்கலாம் என்று தெரிந்தது.
அடுத்துச் சென்றது, கடற்புலிகளின் தளபதி சூசை வீடு.
சுற்றியும் ஈ மொய்ப்பது போல பொம்மைக் கடைகளும் தின்பண்டக் கடைகளும் நிறைந்து இருந்தன. உள்ளே நுழையும்போது ஒருவர் இடையில் வந்து, ‘எப்படி இருக்கீங்க?’ என்றார்.
நீங்கள் யார்னு தெரியலயே?’ என்றேன். ‘தம்பி, நான் உங்கள ரெண்டு நாளைக்கு முன்னாடி முல்லைத்தீவு பஸ்ல பாத்தன். நீங்க பக்கத்துல ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்திங்க. தமிழ்நாடு போல இருந்துச்சு. எப்படியும் இங்க வருவீங்க… பேசிக்கலாம்னு இருந்தேன். நினைச்சதுபோலவே வந்திட்டங்க. நானும் இங்கதான் கடை போட்டிருக்கன் என்றார்.
புன்னகைக்க… மேலும் தொடர்ந்தவர், ”நானும் தமிழ்நாட்டுல மதுரைதான் தம்பி. மலையகத்துல இருந்து எங்கள அடிச்சுத் துரத்தன காலத்துல இந்தப் பக்கம் வந்துட்டம். எங்க சொந்தக்காரங்க நிறையப் பேர் சேலம், திருச்சியிலலாம் இப்பவும் இருக்காங்க” என்றார். நம்மவர் யாராவது வருவார்களா, அவர்களிடம் ஊரைப்பற்றிப் பேசலாமா என்ற ஏக்கம் உள்ள மனிதரின் குரலாக அது இருந்தது.
அவரிடம் பேசிவிட்டு சூசையின் வீட்டுக்குள் நுழைந்தோம். வீட்டின் முகப்பில் ‘எதிரிகளே நமது நல்ல ஆசிரியர்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
உள் அறையில் ஓர் கதவு பீரோ போல் இருந்தது. அதுதான் பங்கர்க்குச் செல்லும் வழி. அதைப் பார்க்க வந்த ஒரு சிங்கள மூதாட்டி தவறி விழுந்து இறந்து விட்டாராம். அதனால், இப்போது அதை மூடி விட்டார்களாம்.
போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழகத்துக்குப் பேசிய சூசை, ‘கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல் நடந்துகொண்டு இருக்கு. நிறைய சனம் செத்துக்கொண்டு இருக்கு. இரண்டு கி.மீ. அகலத் துண்டுக்குள்ள கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருக்கு. எல்லா இடமும் பிணக் குவியல்கள்தான்.
கே.பி.பத்மநாபன் ஊடாக ஜெனிவாவோடு தொடர்பு கொண்டு வெள்ளவாய்க்கால் வழியாக காயப்பட்டுக்கொண்டு இருந்த மக்களை எடுக்கச் சொன்னம். ஆனா, எடுக்கல. அந்த மொத்தச் சனமும் இப்ப செத்திட்டுது.
நாங்களும் இராணுவத்த எதிர்த்து சண்ட பிடிச்சுக்கொண்டு இருக்கம். கடைசி வரை நாங்கள் அடிபணிய மாட்டம். ஆனா, எங்க மக்கள் செத்துக்கொண்டு இருக்கினம்.
சர்வதேசம் திரும்பிப் பாக்கையில. மக்கள் எல்லாம் பங்கர்குள்ள இருக்க வெச்சிருக்கனம். சுத்தி வளைக்கப்பட்ட பங்கர்களில் மக்கள் இருக்கினம்.
மக்களை வெளியில எடுக்கச் சொல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கம்’ என்று சொல்ல, எதிர் முனையில் இருந்தவர் அழ… ‘அழாதடா, தமிழன் அழக் கூடாது. வெல்லுவம் வெல்லுவம்’ என்ற குரல் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது.
அந்த வீட்டுக்குள் சூசையின் சூரிய முகம் பளிச்சிடுவதாகவே உணர முடிந்தது. மக்களை பங்கர்குள் இருக்க வெச்சிருக்கம் என்று சூசை குறிப்பிட்ட மக்களைத்தான் விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக போரில் பயன்படுத்தினர் என்று சர்வதேசமும் ஐ.நா-வும் குறிப்பிடுவது.
இருள் கவ்விக்கொண்டு இருந்த வேளையில் புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்கிறேன்.
கந்தசாமி கோயில் அருகே ஒரு காலத்தில் புலிகளின் சமாதானச் செயலகம் இருந்தது. அதைக் கடந்து விரைகிறேன்.
அடுத்த நாள் காலை இரணைமடு குளத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் உள்ளூர் நண்பரோடு நகர்ந்தேன். அந்த இரணைமடுவில்தான் அன்டன் பாலசிங்கம்…
ஊடறுத்துப் பாயும்…….
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி…இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 08புலித்தடம் தேடி…இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 07புலித்தடம் தேடி…! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 06புலித்தடம் தேடி…இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 05புலித்தடம் தேடி…! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 04புலித்தடம் தேடி…! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 03புலித்தடம் தேடி…! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 02புலித்தடம் தேடி……..! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 01
கூடங்குளம் போரட்டக் களத்தில் 'புலித்தடம் தேடி...' புத்தக வெளியீடு!
'ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் அல்ல!'
(தொகுப்பு: பூந்தளிர்ருக்காக வெங்கட் ஷர்மா மயிலாப்பூர்)
|
No comments:
Post a Comment