Sunday, December 29, 2013

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்!

Sunday, December 29, 2013
இலங்கை::இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பகிரங்க கருத்துப் பரிமாறல் நடைபெறவுள்ளது.

இலங்கை அரசாங்கம் அதன் பக்க நியாயங்களை முன்னிலைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் வாய்மொழிமூல அறிக்கை ஒன்றை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருத முடியவில்லை என நவனீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment