Sunday, December 29, 2013

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு சம்பந்தணின் முரண்பாடான அறிக்கைகள்!

Sunday, December 29, 2013
இலங்கை::பிறக்கும் புதுவருடத்துடனாவது தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்க்குமென நம்பியிருந்தால் அதிலும் மண்ணை அள்ளிப் போடுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாகவே உள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்வதில் அர்த்தமில்லை, எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினைக் காண முன்வாருங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து விடுத்த அழைப்பினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மூன்று நாட்கள் கடக்க முன்னதாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு பற்ற முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
 
சம்பந்தணின் இந்த முன்னுக்குப் பின் முரண்பாட்டு அறிவிப்புகள் தமிழ் மக்களிடையே பெரும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளன. ஜனாதி பதியின் அறைகூவலினால் மகிழ்ச்சியால் உந்தப்பட்ட தமிழ்ச் சமூகம் அதனைத் தொடர்ந்து வந்த சம்பந்தனின் சாதகமான பதிலினால் நெகிழ்ந் திருந்தது. இரு தலைவர்களும், இணைந்து நல்லதொரு தீர்வினைக் கண்டு தமிழ் மக்களது நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்த்துவிடுவார்கள் எனும் நம்பிக்கையிலிருக்கையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த வேண் டுகோளுக்கு வவுனியாவில் வைத்து எதிர்மறையான கருத்தினை சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
 
கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இழுத்தடிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் ஒருதடவை கூறியது போன்று இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டுவிட்டால் இந்த தமிழ்த் தேசியக் சம்பந்தணின் கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கு இடமில்லாது போய்விடுமோ எனும் பயம் உள்மனதில் உள்ளது. அதுதான் உண்மையும். அதனால்தான் கைக்கெட்டும் தூரத்திற்கு வரும் தீர்வு முயற்சிகளையும் இவர்கள் பொய்யான காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வருகின்றனர்.
 
இதுவரை காலமும் அரசாங்கத்தைக் குறை கூறி வந்த தமிழ்க் கூட் டமைப்பு இன்று அதன் தலைவரான ஜனாதிபதியே பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள போதிலும் அதனைத் தட்டிக் கழிக்க முனைவது அவர்களுக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அக்கறையில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இத்தகையதொரு சந்தர்ப்பம் வராதா என ஏங்கி அதனைச் சரிவரப்பயன்படுத்தக் காத்திருக்க வேண்டி யவர்கள் இன்று அது கைகூடிய போதும் தட்டிக் கழிக்க காரணங்களைத் தேடுவதில் குறியாகவுள்ளமை இவர்களது சுயரூபத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.
 
பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கைகளை முன்வைத்தமையைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அடுத்தடுத்த தினங்களிலேயே அக்கோரிக்கைகளை விஞ்சும் விதத்தில் பேச்சிற்கு ஆணிவேராக அமையவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விமர்சிப்பதானது இவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் துளியளவும் அக்கறையில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. நாட்டின் தலைவரது அழைப்பை ஏற்று பேசச் சென்று அப்பேச்சில் திருப்தி இல்லாவிடின் விமர்சனங்களைச் செய்தால் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்களோ பேச முன்னரேயே விமர்சனம் செய்வது சந்தேகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.
 
கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இவர்கள் நடத்திய பேச்சு
வார்த்தைகளின் போது இவர்களால் நடத்தப்பட்ட கபட நாடகங்கள் பற்றி மக்களுக்கு மட்டுமல்ல அரசாங்க தரப்பிற்கும் நன்கு தெரியும். உள்ளே நன்றாகப் பேசிவிட்டு வெளியே வந்து அங்கு நிற்கும் தமிழ் ஊடகங்கள் சிலவற்றின் நிருபர்களுக்கு அரசாங்கத்தைவிமர்சித்து கருத்துக்களைக் கூறுவர். இது பேச்சு நடந்த ஏழு சுற்றுக்களின் போதும் நடந்த ஒன்று. அரசாங்கம் இதனை நன்கு அறிந்திருந்தும் எப்படியாவது பேச்சுவார்த் தையை நடத்திமுடித்துத் தீர்வினைக் காண வேண்டும் என்பதில் குறியாக இருந்தது.
 
ஆனால் இடைநடுவில் பேச்சைக் குழப்பி சர்வதேசம் செல்கிறோம் என்று கூறி அமெரிக்கா, கனடா, தென்னாபிரிக்கா, இந்தியா எனச் சுற்றுலா சென்று வந்தனர். இறுதியில் எதுவுமே கைகூடா நிலையிலும், அனை வராலும் கைவிடப்பட்ட நிலையிலும் விழுந்தவன் மீசையில் மண்பட வில்லையாம் என்பதாக இங்கேயே திரும்பிவந்து நின்றனர். தமிழ் மக்களுக்கு நல்லதையே செய்துவரும் அரசாங்கத்தை விமர்சித்து தமிழ் மக்களின் மனங்களை மாற்றி தேர்தல்களில் வென்று வருகின்றனர். இதுவும் சர்வதேசம் போலவே இன்னும் நீண்ட காலத்திற்குச் செல்லாது.
 
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் தனது கபடத்த னத்தினால் தமிழ் மக்களை ஏமாற்றாது பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். வடக்கில் இன்று அரசாங்கத்தின் நிதியில் தமிழ் மக்க ளுக்கான அபிவிருத்தியைப் புறக்கணிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு தமக்கான தனிப்பட்ட சகல வரப்பிரசாதங்களையும் ஒன்றுவிடாது அரசாங் கத்திடம் கேட்டு அனுபவித்து வருகின்றது. இவ்விடயம் மக்களுக்கு இன்று நன்கு தெரியும். தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களது நிலை இதனை விடவும் பிரகாசமானதாக உள்ளது.
 
வன்னியில் கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு அரசாங்கம் உதவிபுரிந்தால் எள்ளிநகையாடும் சில தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர்கள் தமது பிள்ளைகளை அரசாங்கத்தின் புலமைப்பரிசிலில் வெளிநா டுகளில் கல்வி கற்க அனுப்பி வைத்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட வன்னியிலுள்ள ஏழை மக்களின் வீடுகளை அரசாங்கம் புரனமைப்பதை விமர்சிக்கும் இத்தகைய சிலர் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சொந்தமாகச் சொகுசு வீடுகளை அரசாங்கத்தின் பதவியினால் கிடைக்கும் சம்பளப்பணத்தில் வாங்கி வைத்துள்ளனர்.

இனிமேலும் தமிழ் மக்களை உங்களது அரசியல் இருப்பிற்காகவும், சொகுசு வாழ்விற்காகவும் பகடைக் காய்களாக்க வேண்டாம். பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கண்டு மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள். இதுவே மக்களது கோரிக்கையாக உள்ளது. இதற்காகவே மக்கள் உங்களுக்கு நம்பி வாக்களித்தார்கள்.

No comments:

Post a Comment