இலங்கை::வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த (புலி)கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுந்தரபுரம் வீட்டுத் திட்ட பகுதியில் இராணுவத்தில் இணைந்துள்ள யுவதியொருவரின் வீடு நேற்று அதிகாலை (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்களால்
எரியூட்டப்பட்டிருந்தது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற வேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருந்ததுடன், ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் இரவு தங்கியிருந்த நிலையில் குறித்த வீட்டிற்குள் நுழைந்து பெறுமதிமிக்க தளபாடங்கள், ஆவணங்களை தீயிட்டு எரித்துள்ளனர். அத்துடன் வீடும் எரியூட்டப்பட்டுள்ளது.
தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டின் பாதிக்கப்பட்ட வீட்டார் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரால் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது.
இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்
No comments:
Post a Comment